திருவள்ளூர் ஒன்றியத்தில் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ஏ.சி.சத்தியமூர்த்தி தீவிர பிரசாரம்

திருவள்ளூர், மார்ச் 31: பகுஜன் சமாஜ் கட்சியின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஏ.சி.சத்தியமூர்த்தி திருவள்ளூர் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் வீடு, வீடாக சென்று யானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது கிராம மக்கள் திரண்டு வந்து, “எங்களது வாக்கு யானைச் சின்னத்திற்கு தான்” என வாழ்த்தி ரூபாய் நோட்டு மாலையை அணிவித்தும், ஆளுயர ரோஜா மாலை, கிரீடம் அணிவித்தும், ஆரத்தி எடுத்தும் உற்சாக வரவேற்பளித்தனர்.

அப்போது வேட்பாளர் ஏ.சி.சத்தியமூர்த்தி பேசும்போது, “பகுஜன் சமாஜ் கட்சியின் தேர்தல் அறிக்கை கிடையாது. மாறாக ஒரு நோட்டு ஒரு ஓட்டு என்கிற கொள்கையின் அடிப்படையில் வேட்பாளர் ஏ.சி.சத்தியமூர்த்தி மக்களிடமிருந்து ஒரு ரூபாய் வாங்கிக் கொண்டு ஒரு ஓட்டையும் கேட்டுவருகிறார். பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சிக்கு வந்தால் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் உள்ளபடியே ஏழை எளிய மக்களுக்கு விவசாய நிலம் 3 ஏக்கர் இலவசமாக கொடுக்கப்படும்.

மக்கள் நலன்களை பாதுகாக்க உண்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள். தேர்தல் என்பது அதிகாரத்தை தனிநபரிடத்தில் கொண்டுபோய் குவிப்பதற்காக நடத்தப்படுவது அல்ல. மாறாக, அனைத்து மக்களுக்கும் அதிகாரப்பகிர்வை ஏற்படுத்தவே நடத்தப்படுவதாகவும்.நாட்டில் சமூகப் புனரமைப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி இந்த 2021 சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது,” இவ்வாறு அவர் பேசினார்.

இந்த வாக்கு சேகரிப்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ்.சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் பகுஜன் பிரேம், அம்பேத் ஆனந்தன், வீரா விஜி, ஆர்.டில்லி, வழக்கறிஞர் ராஜேஷ், சித்துக்காடு ரவிக்குமார், கவி, செவ்வை ராஜ், சுரேஷ், தொழுவூர் கபிலன், பூவை வதட்டுர்  நாகராஜன், இளங்கோ, சாலமோன், கீழானூர் ராசா, புலியூர் கவி, விஜய், புட்லூர் தமிழ், தண்ணீர்குளம் சரண்ராஜ், முகேஷ், மேலக்கொண்டையூர் பிரபா தொட்டிகளை பாட்ஷா, திருவூர் ரஞ்சித், காக்களூர் ஈசாக், பூவை வேல்முருகன், தீபன், தமிழரசன், ஜெய்பீம் ஜெய், புங்கத்தூர் பிரேம் ஆகியோர் வாக்கு சேகரித்தனர்.

Related Stories: