மப்பேடு பகுதியில் ஆரம்ப சுகாதார மையம் கொண்டுவர நடவடிக்கை

திருவள்ளூர், மார்ச் 31: திருவள்ளூர் தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் கடம்பத்தூர் ஒன்றியத்தில் மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் மோ.ரமேஷ் தலைமையில் நேற்று மப்பேடு, உளுந்தை, தொடுகாடு, கீழச்சேரி, எறையமங்கலம், பிஞ்சிவாக்கம் ஆகிய கிராமங்களில் கிராமம், கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார்.  அப்போது அவர் பேசுகையில், “மப்பேடு கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்வேன். குறைந்த மின்னழுத்த போக்கும் வகையில் மப்பேடு பகுதிக்கு துணை மின் நிலையம் ஒன்றை அமைத்து தருவேன்,” இவ்வாறு அவர் பேசினார்.

இதில் உளுந்தை ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.ரமேஷ், முன்னாள் ஊராட்சி தலைவர் ஆர்.கோபால், ஊராட்சி செயலாளர்கள் கதிர்வேல், கணேசன், தமிழ்ச்செல்வன், பிரகாஷ், திமுக நிர்வாகிகள் பாபா முருகன், அரிதாஸ், பிரபு, மேகவர்ணன், பன்னீர்செல்வம், பாலாஜி, இ.சிவா, புருஷோத்தமன், எம்.முனிரத்தினம், ஜி.அரிபாபு, ஜி.ரவி, பிரகாஷ், ஊராட்சி துணைத் தலைவர் ரகு, வார்டு உறுப்பினர் அஜய், விசிக நிர்வாகிகள் மோகன், எஸ்.சத்தியா, நாகராஜ், தினகரன், ஜெயக்குமார், இ.சத்தியா, உதயா, பிரபு, திமுக மாவட்ட பொறுப்பு குழு உறுப்பினர் சரஸ்வதி சந்திரசேகர், கே.அண்ணாமலை, கீதாமுனுசாமி, டி.தேவராஜ், பி.மோகன், பி.காமராஜ், எம்.ரவி, ஆர்.கோபால், டாக்டர் முரளி, எஸ்.ஜெகஜீவன்ராம், ஜெயவேல், பிவிகே.தினேஷ், ஆர்.கே.டேனியல், ராஜா, தேவா,உ.சரத்பாபு ஆர்.மனோஜ், பிரபா, சண்முகம், ராஜேந்திரன், முனுசாமி, அரிகிருஷ்ணன், நாராயணமூர்த்தி, காங்கிரஸ் வட்டார தலைவர் இருதயராஜ், சதீஷ், விசிக நிர்வாகிகள் எஸ்.கே.குமார், இளஞ்செழியன், ஈசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>