அனைத்து கிராமங்களுக்கும் வீட்டுமனை பட்டா, குடிநீர் வசதி

செங்கல்பட்டு, மார்ச் 31: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளிலும் வீட்ட மனை பட்டா, குடிநீர் வசதி செய்து தரப்படும் என அதிமுக வேட்பாளர் கஜா (எ) கஜேந்திரன் கூறினார். செங்கல்பட்டு தொகுதி அதிமுக வோட்பாளர் கஜா (எ) கஜேந்திரன் நேற்று காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு மேலமையூர், வல்லம், ஆலப்பாக்கம், ஓழலூர் ஆகிய ஊராட்சிகளில் உள்ள   கிராமங்களில் திறந்த ஜீப்பில் சென்று,  இரட்டைஇலை சின்னத்துக்கு கூட்டணி கட்சியினருடன் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது. காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட 39 ஊராட்சிகளின் அனைத்து கிராமங்களிலும் தங்கு தடையின்றி  குடிநீர் சப்ளை செய்யப்படும். அனைத்து பகுதிகளுக்கும் சாலை வசதி செய்து தரப்படும். செங்கல்பட்டு தொகுதியின்  குக்கிராமங்களுக்கும் அரசு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். நீண்ட ஆண்டுகளாக அரசு புறப்போக்கு நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்றுத்தரப்படும். அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள அனைத்து அரசு திட்டங்களையும் தவறாமல் பெற்றுத்தருவேன் என்றார்.

இதில்,  காட்டாங்கொளத்தூர் அதிமுக  கிழக்கு  ஒன்றிய செயலாளர் சம்பத்குமார், மாவட்ட எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் பொன்னுசாமி, ஆலப்பாக்கம் ஊராட்சி முன்னாள் தலைவர்  கே.சல்குரு, ஒன்றிய ஜெ. செயலாளர் வழக்கறிஞர் ஏ.சுதேஷ்ஆனந்த், அதிமுக ஊராட்சி நிர்வாகிகள் மேலமையூர் கோபிகண்ணன், வல்லம் அருள்தாஸ், ஒழலூர் சங்கர், பரனூர் சரவணன், அஞ்சூர் தேவராஜ், தென்மேல்பாக்கம் கோவிந்தன், உமாபதி, வழக்கறிஞர் சி.கே.பெருமாள், பாமக நிர்வாகி இளந்தோப்பு வாசு, புரட்சி பாரதம் மாவட்ட செயலாளர் சி.கே.மூர்த்தி, பாஜ மாவட்ட செயலாளர் மகேஸ்வரி, ராஜதேவன், டி.விஜயகுமார், ஜோதிபிரகாஷ், தனசேகர், ஆனந்த், உள்பட கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>