அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வீதி வீதியாக சென்று பிரசாரம்

மதுராந்தகம், மார்ச் 31: வீட்டு மனை பட்டா இல்லாத குடும்பங்களுக்கு, வீட்டு மனை பட்டா பெற்று தருவேன் என அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்குறுதியளித்தார். மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் நேற்று மதுராந்தகம் வடக்கு ஒன்றியத்தில் தீவிர பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, அவருடன் அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் அப்பாதுரை, பாமக மாநில துணை பொது செயலாளர் பொன்.கங்காதரன், மாவட்ட செயலாளர் ஆத்தூர் வ.கோபாலகண்ணன், ஒன்றிய செயலாளர் சகாதேவன், பாஜ ஒன்றிய தலைவர் தாமோதரன் மற்றும் தமாகா, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளை சேர்ந்த ஏராளமான தொண்டர்கள் காலை 7 மணியளவில் எல்என் புரத்தில் பிரசாரத்தை தொடங்கினர். தொடர்ந்து அரசர்கோயில், பாத்தூர், செட்டிமேடு, புலிப்புரக்கோவில், படாளம், பழையனூர், கொளம்பாக்கம், வையாவூர், மாம்பட்டு, மூசிவாக்கம், மலைவையாவூர், குன்னங்குளத்தூர், சூரை, புழுதிவாக்கம், மேட்டுக்குடிசை, அண்டவாக்கம், வேடவாக்கம், பசும்பூர், குன்னவாக்கம், பில்லாஞ்சி ஆகிய கிராமங்களில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, வேட்பாளர் மரகதம் குமரவேல் பேசுகையில், ‘இந்த பகுதியில் உள்ள பல கிராமங்களில் ஏராளமான குடும்பங்கள் சொந்த வீட்டு மனை பட்டா இல்லாமல் வாழ்ந்து வருகின்றனர். இதனால் அவர்களுக்கு அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் இருக்கின்றனர். குறிப்பாக, அரசு வீடு கட்டும் திட்டங்களில் அவர்களால் பயன்பெற முடியவில்லை. எனவே, அவர்கள் அனைவருக்கும் இலவச வீட்டு மனை பட்டா பெற்றுத்தர வேண்டியது. நமது கடமையாக இருக்கிறது. நான் வெற்றி பெற்றால் நிச்சயமாக இப்பகுதியில் வீட்டுமனை பட்டா இல்லாமல் உள்ள குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா பெற்று தருவேன்’ என்றார்.

Related Stories:

>