சாத்தூர் தொகுதியில் அனைத்து கிராமங்களிலும் போட்டி தேர்வு பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்படும் அமமுக வேட்பாளர் ராஜவர்மன் உறுதி

சாத்தூர், மார்ச் 31: சாத்தூர் சட்டமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் ராஜவர்மன் நேற்று சாத்தூர் கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட அமீர்பாளையம், ஓ.மேட்டுப்பட்டி, ஒத்தையால், புது சூரங்குடி, நடுச்சூரங்குடி. ஸ்ரீ ரங்காபுரம், தென்றல்நகர், படந்தால் உள்ளிட்ட பகுதிகளில் குக்கர் சின்னத்தில் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘அனைத்து கிராமங்களிலும் பொது நூலகம் அமைத்து அதன்மூலம் போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். வீடுகள்தோறும் குடிநீர் குழாய் இணைப்பு அமைத்து தருவேன், சாத்தூருக்கு வரவிருக்கும் ரயில்வே மேம்பாலத்திற்கு மாற்று பாதை அமைத்து. வியாபாரிகளின் நலன் காக்க பாடுபடுவேன். முக்கிய சாலை சந்திப்புகளில் உயர் மின்விளக்கு கோபுரங்கள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். சிறுபான்மையினர் நலன் காக்க பாடுபடுவேன்’ என்றார். பிரசாரத்தில் அமமுக நகர, ஒன்றிய நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>