போடி இல்லத்து பிள்ளைமார் சங்கத்தில் திமுக வேட்பாளருக்கு வரவேற்பு

போடி, மார்ச் 31:  போடியில் உள்ள இல்லத்து பிள்ளைமார் சங்கத்தில், திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனுக்கு, அந்த சமூகத்தினர் அமோக வரவேற்பு அளித்தனர். அப்போது உதயசூரியனுக்கு வாக்கு அளிப்போம் என உறுதி அளித்தார்.

தேனி மாவட்டம், போடி தொகுதியில் திமுக சார்பில், வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தங்க.தமிழ்ச்செல்வனும், அதிமுக சார்பில் துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் போட்டியிடுகின்றனர். 10 ஆண்டாக தொகுதி எம்.எல்.ஏவாக இருந்த ஓ.பன்னீர்செல்வம் தொகுதிக்கு எதுவும் செய்யாததால், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், திமுக வேட்பாளர் தங்கதமிழ்ச்செல்வனுக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போடி பஸ்நிலையம் அருகில் உள்ள இல்லத்துப்பிள்ளைமார் சங்க கட்டிடத்திற்கு வாக்கு சேகரிக்க சென்றார். அங்கிருந்த அந்த சமூகத்தினர், திமுக வேட்பாளரை மகிழ்ச்சியுடன் வரவேற்று, சால்வைகள் போர்த்தினார். அவர் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்ய வேண்டும் என வாக்கு கேட்டு சேகரித்தார்.

Related Stories:

>