×

கம்பம் தொகுதியை மேம்படுத்த 24 திட்டங்கள் நோட்டீஸ் வழங்கிய அமமுக வேட்பாளர்


கம்பம், மார்ச் 31: கம்பம் அமமுக கட்சி அலுவலகத்தில், தொகுதி வேட்பாளர் சுரேஷ்  தலைமையில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. நகரச் செயலாளர் ராஜமணி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ‘கம்பம் தொகுதியில் சின்னமனூர் ஸ்ரீசிவகாமி அம்மன் உடனுறை பூலாநந்தீஸ்வரர், ஸ்ரீபெருமாள் கோயில் உள்ளிட்ட அனைத்து கோயில்களும் கும்பாபிஷேகம் செய்ய நடவடிக்கை, சாக்குலூத்து மெட்டுரோடு அமைக்க நடவடிக்கை, பழச்சாறு தொழிற்சாலை, காய்கறி பதப்படுத்தும் குளிர்பதன கிட்டங்கி, உத்தமபாளையத்தில் ஒருங்கிணைந்த அரசு அலுவலக வளாகம், கம்பம் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி, வேளாண்கல்லூரி, பாலிடெக்னிக் கல்லூரி அமைக்க நடவடிக்கை, கம்பம் அரசு மருத்துவமனை அனைத்து வசதிகளுடன் கூடிய மாட்ட தலைமை மருத்துமனையாக தரம் உயர்த்தல், கம்பம் தொகுதியில் கால்நடை வாரச்சந்தை உள்ளிட்ட 24  திட்டங்களை பட்டியலிட்ட நோட்டீசை அமமுக வேட்பாளர் சுரேஷ் கம்பம் நகரச்செயலாளர் ராஜாமணியிடம் வழங்கினார். பின் இந்த நோட்டீஸ் வார்டு செயலாளர்களிடம் வழங்கப்பட்டது.  

நிகழ்ச்சியில் அம்மா பேரவை மாநில துணைதலைவர் ஸ்டார் ரபீக், அமமுக  கம்பம் ஒன்றிய செயலாளர் தீபாவளிராஜ், மாவட்ட துணைச்செயலாளர் குமரன், மாவட்ட விவசாய அணி செயலாளர் கார்த்திகேயன், அவைத்தலைவர் ராமர், துணைச்செயலாளர் பவர்சாதிக் ராஜா, மாவட்ட பிரதிநிதி சாமாண்டி, சாகுல்ஹமீது, இணைச் செயலாளர் கருப்பையா, டேவிட் அன்பையா, நகர பொறுப்பாளர் நாகராஜ் மற்றும் எஸ்டிபிஐ, தேமுதிக உட்பட கூட்டடணி கட்சியினர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து நோட்டீசுடன் அமமுகவினர் கம்பம் பகுதியில் வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Tags :
× RELATED நலத்திட்ட உதவிகள் கிடைக்காவிட்டால்...