இன்று கனிமொழி எம்பி வருகை

சிவகங்கை, மார்ச் 31:திமுக மாவட்ட செயலாளர் கேஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி எம்பி இன்று சிவகங்கை மாவட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். இன்று மாலை 4 மணிக்கு மானாமதுரை, பழைய பஸ் ஸ்டாண்ட் அண்ணாசிலை ரவுண்டானா அருகிலும், மாலை 5.30 மணிக்கு சிவகங்கை அரண்மனை வாசல் முன்பும், மாலை 6.30 மணிக்கு திருப்பத்தூரில் மானகிரி நான்கு ரோடு சந்திப்பிலும், இரவு 7.30 மணிக்கு காரைக்குடி ஐந்து விளக்கு முன்பும் தேர்தல் பிரச்சாரம் செய்ய உள்ளார். எனவே மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளை சார்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள், கிளை, வார்டு கழக நிர்வாகிகள், அனைத்து சார்பு அணி அமைப்பாளர்கள், உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கட்சியினர் அனைவரும் பிர்சசாரத்திற்கான உரிய ஏற்பாட்டை செய்து இக்கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related Stories:

>