×

கொல்லங்குடி கோயிலில் தேரோட்டம் கோலாகலம்

காளையார்கோவில், மார்ச் 31: காளையார்கோவில் அருகில் உள்ள கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் திருவிழா தேரோட்டம் நேற்று நடைபெற்றது. காளையார்கோவில் அருகே கொல்லங்குடி அரியாகுறிச்சியில் அமைந்துள்ள வெட்டுடையார் காளியம்மன் கோவில் திருவிழா மார்ச் 22ம் தேதி தங்கக் கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கேடக விமானம், பூதகி, கிளி, அன்னம், காமதேனு, காளை, சிம்மம், தங்கக் குதிரை, யானை போன்ற வாகனங்களில் திருவீதி உலா வந்து அம்மன் காட்சியளித்தார். நேற்று காலை 8 மணிக்கு மேல் திருத்தேர் வடம்பிடித்து இழுக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.10ம் நாள் திருவிழாவாக இன்று காலை தீர்த்தவாரி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து இரவு மலர் பல்லாக்கில் அம்மன் காட்சியளிக்க உள்ளார். இத்திருவிழாவையொட்டி வெளியூர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் நடை பயணமாக வருகின்றார்கள். விழா ஏற்பாடுகளை இணை ஆணையர் சிவகங்கை தனபால், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் கொல்லங்குடி அரியாகுறிச்சி கிராம பொதுமக்கள் செய்துள்ளனர்.

Tags : Kollangudi temple ,
× RELATED வறட்சியின் பிடியில் நீர் நிலைகள்...