காரைக்குடியில் வறட்சி காலங்களில் விவசாயத்தை காக்க போர்வெல் அமைக்கப்படும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி உறுதி

காரைக்குடி, மார்ச் 31: காரைக்குடி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி, நேற்று சாக்கோட்டை ஒன்றியம் வலையன்வயல், புதுக்கண்டனூர், சின்ன வேங்காவயல் உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரித்தார். அப்ேபாது அவர் பேசுகையில், ‘‘கண்மாய் தண்ணீரைத்தான் நம்பி நீங்கள் விவசாயம் செய்து வருகிறீர்கள். விளைநிலங்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு தண்ணீர் பாய்ச்ச போர்வெல் உள்ளவர்களிடம் இருந்து ரூ.300க்கு மேல் செலவு செய்கிறீர்கள். எனவே வறட்சிகாலங்களில் விவசாயத்திற்கு தண்ணீர் தேவைக்கான போர்வெல் அமைத்து தர நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். இப்பகுதியில் விளையும் காய்கறி பயிர்களை காக்கவும், பூச்சி மற்றும் நோய் தாக்குதலில் இருந்து காக்கவும் விவசாய அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு உரிய ஆலோசனை வழங்கப்படும். மக்களின் தேவைக்கு ஏற்ப அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

காய்கறி விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்ய சந்தை வசதி செய்யப்படும்’’ என்றார். பிரசாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, மாவட்ட கவுன்சிலர் ராதாபாலசுப்பிரமணியன், சட்ட பாதுகாப்புகுழு வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், ஒன்றிய துணை செயலாளர் சொக்கலிங்கம், வைகோ சுப்பிரமணியன், காங்கிரஸ் வட்டார தலைவர் செல்வம், இளைஞரணி நிர்வாகி நெல்லியான், மதிமுக மாநில நிர்வாகி பசும்பொன் மனோகரன், ஒன்றிய செயலாளர் உலகநாதன், டெல்லி விவசாயிகள் போராட்ட குழு செயற்குழு உறுப்பினர் ராஜ்வேந்தர்சிங் கோல்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>