×

தொகுதி மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் பணிகள் செய்துள்ளேன் திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ பேச்சு

திருப்புத்தூர், மார்ச் 31:  சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னால் இயன்ற பணிகளை தொகுதி மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் மனநிறைவோடு செய்திருக்கிறேன் என, திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ தெரிவித்தார். திருப்புத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கே.ஆர்.பெரியகருப்பன் எம்எல்ஏ  சிங்கம்புணரி ஒன்றிய கிராமங்களில் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், ‘‘மத்திய அரசை பொறுத்தவரையில், தமிழ்நாட்டை வஞ்சிக்கின்ற அரசாக மட்டுமே உள்ளது. தமிழ் மொழியை அழிக்கின்ற அரசாக உள்ளது. நீங்கள் என் மீது செலுத்துகின்ற அன்பிற்கு, காட்டுகின்ற ஆதரவுக்கு கைமாறு செய்வதற்காக காலத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன். என்னை இரண்டு முறை வெற்றிபெற செய்தீர்கள். ஆனால் தமிழகத்தின் துரதிர்ஷ்டம் திமுக எதிர்க்கட்சியாக அமைந்தது.

இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் என்னால் இயன்ற பணிகளை தொகுதி மக்களுக்கு பாரபட்சம் இல்லாமல் மனநிறைவோடு செய்திருக்கிறேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொதுவாக எல்லா கட்சிகளும் வாக்குறுதிகளை தருவார்கள். ஆனால் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற தலைவர்களில் சிலர். அந்த வகையில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றிய தலைவர் மறைந்த தலைவர் கலைஞர். கலைஞர் வழியில் வந்த அவரது மகன் தலைவர் மு.க.ஸ்டாலின் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை தந்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைந்தவுடன் அனைத்து வாக்குறுதிகளும் முழுமையாக நிறைவேற்றப்படும்’’ என்றார்.

Tags : DMK ,KR Periyakaruppan ,MLA ,
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...