தொகுதி வளர்ச்சிக்கு அயராது உழைப்பேன் திமுக வேட்பாளர் வெங்கடேசன் உறுதி

வாடிப்பட்டி, மார்ச் 31:  சோழவந்தான் தொகுதி திமுக வேட்பாளர் ஏ.வெங்கடேசன் மதுரை மேற்கு ஒன்றியம் வைரவநத்தம், வயலூர், பொதும்பு, அதலை, பட்டக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களில் வீதி வீதியாக சென்று வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசிய வெங்கடேசன்,‘‘10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் சோழவந்தான் தொகுதிக்கு மக்கள் பயன்பெறும் நலத்திட்டங்கள் எதுவும் சரியாக கிடைக்க வில்லை. நான் வெற்றி பெற்றால் மக்களின் வளர்ச்சிக்காக இரவு, பகல் பாராமல் அயராது உழைப்பேன். திமுக ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகையாக குடும்ப அட்டை உள்ள அனைத்து பெண்களுக்கும் வழங்கப்படும். முதியோர், விதவை, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.

திமுக ஆட்சிக்கு வந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் ஆனவுடன் சிலிண்டருக்கு மாதம் ரூ.100 மானியம் வழங்குவதுடன் விலையினை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். இப்படி மக்கள் பயன்பெறும் வகையில் மக்களுக்கான அரசு அமைந்திட உங்களில் ஒருவனாக உழைக்கும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களியுங்கள் என தெரிவித்தார். பிரச்சாரத்தின் போது, மேற்கு ஒன்றிய செயலாளர் பொதும்பு தனசேகர், திமுக நிர்வாகிகள் டாக்டர் பாலமுருகன், வசந்த், காங்கிரஸ் கட்சி குருசாமி, ஜெகதீசன் மற்றும் திரளான திமுக மற்றும் தோழமை கட்சியினர் பங்கேற்றனர்.

Related Stories:

>