இடைப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து நடிகை சசிரேகா வாக்குசேகரிப்பு

இடைப்பாடி, மார்ச் 31: இடைப்பாடி தொகுதியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவாக அதிமுக தலைமை செய்தி தொடர்பாளர் நடிகை சசிரேகா நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பூலாம்பட்டியில் பிரசாரத்தை துவங்கிய அவர், ஆலச்சம்பாளையம், இடைப்பாடி பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் ஆதரவு திரட்டினார். அப்போது, நடிகை சசிரேகா பேசுகையில், மக்களால் நான் மக்களுக்காக நான் என ஜெயலலிதா கூறினார். அம்மா கொண்டு வந்த திட்டங்களை விட மிகச் சிறப்பாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்துள்ளார். எனவே, முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தமிழகத்திலேயே அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும்.

நீங்கள் அளிக்கிற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டின் தலையெழுத்தை நிர்ணயம் செய்யப் போகிறது. ஜெயலலிதா பொங்கல் பண்டிகையின் போது ₹100 வழங்கினார். எடப்பாடி பழனிசாமி ₹1000 வழங்கிய நிலையில், 2021 ஆண்டு ₹2000 ரொக்கம், முழுக் கரும்பு கொடுத்துள்ளார். எனவே, அவரை வெற்றி பெற செய்து ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்றார். நிகழ்ச்சியில் அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் வெங்கடாசலம், விவசாய அணி மாவட்ட செயலாளர் செல்லதுரை, ஆவின் பால் கூட்டுறவு சங்க மாவட்ட தலைவர் ஜெயராமன், இடைப்பாடி முன்னாள் நகரமன்ற தலைவர் கதிரேசன், அதிமுக நகர செயலாளர் முருகன், அச்சகம் கூட்டுறவு சங்க சேலம் மாவட்ட தலைவர் கந்தசாமி, நகர ஜெயலலிதா பேரவை பொருளாளர் நாராயணன், நிர்வாகிகள் செங்கோடன், செந்தில், சங்கர் கணேஷ், ராஜவேல், வீரவேல், சிலம்பரசன், கோபால், மாதேஷ், ரேவதி, சரவணன், மாதேஷ் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>