×

மேட்டூர் பாமக வேட்பாளருக்கு விஜய் மக்கள் இயக்கம் ஆதரவு


மேட்டூர், மார்ச். 31. மேட்டூர் சட்டமன்ற தொகுதி பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளருக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் ஆதரவு தெரிவித்துள்ளனர். மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில், பாமக வேட்பாளராக மாநில துணைத் தலைவர் சதாசிவம் போட்டியிடுகிறார். அவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று காலை நடிகர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் பாமக வேட்பாளர் சதாசிவத்தை சந்தித்து அவருக்கு ஆதரவு அளிப்பதாகவும் தேர்தலில் முழுமையான ஒத்துழைப்பை தருவதாக வாக்குறுதி அளித்தனர். தொகுதி முழுவதும் மன்றத்தின் சார்பில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபடுவதாகவும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சியில் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் மகேந்திரன் (தொகுதி பொறுப்பாளர்), பிரபு (கொளத்தூர் ஒன்றிய பொறுப்பாளர்), சிலம்பரசன் (மேட்டூர் நகர தலைவர்) ஹரி, (இளைஞரணி செயலாளர்), ஹேமரீஷ், தினேஷ் (கொளத்தூர் ஒன்றிய நிர்வாகிகள்) கலந்து கொண்டு வாழ்த்தினர். அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் ராஜசேகரன் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags : Mettur BJP ,
× RELATED விஷ தேனீக்கள் அழிப்பு