×

நாமக்கல் மாவட்டத்தில் 215 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை நுண்பார்வையாளர்களுக்கு விளக்க பயிற்சி

நாமக்கல், மார்ச் 31: நாமக்கல் மாவட்டத்தில் 215 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளதாக பயிற்சி முகாமில் கலெக்டர் மெகராஜ் தெரிவித்தார். நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ள நுண்பார்வையாளர்களுக்கான பயிற்சி முகாம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் மெகராஜ் தலைமை வகித்தார். தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் பொதுப்பார்வையாளர்கள் சசிதர் மண்டல்(ராசிபுரம், சேந்தமங்கலம்), ஷோபா(நாமக்கல்), நவ்ஜட்பால்சிங் ரன்த்வானா(பரமத்திவேலூர்), கார்(திருச்செங்கோடு, குமாரபாளையம்) முன்னிலை வகித்தனர்.

இக்கூட்டத்தில் தேர்தல் பொது பார்வையாளர்கள் பேசுகையில், பதற்றமான வாக்குச்சாவடிகளில் பணிபுரிய உள்ள நுண்பார்வையாளர்கள் அனைவரும் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகளின் பணியாளர்கள். வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு நடவடிக்கைகளை பார்வையிட்டு, தேர்தல் நடவடிக்கைகள் விதிகளின்படி நடைபெறுகிறதா என்பதை கண்காணிப்பது நுண்பார்வையாளரின் பணியாகும். நுண்பார்வையாளர்கள் மாதிரி வாக்குப்பதிவு நடைபெறுவதை உறுதி செய்தல், வேட்பாளர்கள் பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா என்பதை பார்வையிடல், வாக்குப்பதிவின் ரகசியம் காக்கப்படுகிறதா, வேட்பாளர்களின் முகவர்கள் செயல்பாடு, அடிப்படை வசதிகள் சரியாக உள்ளதா? வாக்குச்சாவடிக்குள் நுழைய தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்றவர்கள் மட்டும் வருகிறார்களா? என்ற விபரங்களை பதிவு செய்தல் போன்ற பணிகளை மேற்கொள்ளவேண்டும்.

வாக்குப்பதிவின் இயல்பான நிலைக்கு மாறாக  மாறுதல் தென்பட்டால் அது குறித்து உடனடியாக  தேர்தல் பொது பார்வையாளரை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். நுண்பார்வையாளர்கள் தங்களது அறிக்கையை வாக்குப்பதிவு முடிந்த பிறகு பொது பார்வையாளரிடம் நேரில் அளிக்க வேண்டும் என்றனர். இக்கூட்டத்தில் கலெக்டர் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் 215 வாக்குச்சாவடிகள் பற்றமானவையாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடி மையங்களில் வாக்குப்பதிவை கண்காணிக்க நுண்பார்வையாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என்றார்.இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி உள்ளிட்ட நுண்பார்வையாளர்கள், தேர்தல் நடத்தும் அலுவலர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Namakkal district ,
× RELATED தடையை மீறி இறைச்சி விற்பனை