நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் 691 போலீஸ் அதிகாரிகள் குலுக்கல் மூலம் தேர்வு

நாமக்கல், மார்ச் 31: வாக்குப்பதிவு நாளன்று நாமக்கல் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மைய பாதுகாப்பு பணியில் 691  போலீசார் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்கள்  கம்ப்யூட்டர்  மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

சட்டமன்ற தேர்தலையொட்டி, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 2,049 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு நாளன்று வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ள காவல்துறையினர் மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் மெகராஜ்,  எஸ்பி சக்தி கணேசன் முன்னிலையில், கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டனர்.

அதன்படி, ராசிபுரம் தொகுதிக்குட்பட்ட 112 வாக்குச்சாவடி மையங்களில் 112 காவல்துறை அலுவலர்களும், சேந்தமங்கலம் தொகுதிக்குட்பட்ட 129 வாக்குச்சாவடி மையங்களில் 129 காவல்துறை அலுவலர்களும், நாமக்கல்லில் 137 வாக்குச்சாவடி மையங்களில்137 காவல்துறை அலுவலர்களும், பரமத்தி வேலூரில் 127  வாக்குச்சாவடி மையங்களில் 127 காவல்துறை அலுவலர்களும், திருச்செங்கோட்டில் 114 வாக்குச்சாவடி மையங்களில் 114 காவல்துறை அலுவலர்களும், குமாரபாளையத்தில் 72 வாக்குச்சாவடி மையங்களில் 72 காவல்துறை அலுவலர்களும் என மொத்தம் 691 வாக்குச்சாவடி மையங்களில் 691 காவல்துறை அலுவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். இந்நிகழ்ச்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சரணவன், தேர்தல் பிரிவு தாசில்தார்கள் திருமுருகன், சுப்பிரமணி, உள்ளிட்ட உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், போலீஸ் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

>