நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹1 கோடிக்கு பருத்தி ஏலம்

நாமக்கல், மார்ச் 31: நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் ₹1 கோடிக்கு பருத்தி ஏலம் விற்பனையானது. நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில், பல்வேறு பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் 5 ஆயிரம் மூட்டை பருத்தியை விற்பனைக்காக கொண்டு வந்து குவித்தனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்த வியாபாரிகள் ஏலத்தில் கலந்து கொண்டனர். கூட்டுறவு சங்க அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் முன்னிலையில் ஏலம் நடைபெற்றது. இதில், ஒரு குவிண்டால் பருத்தி ₹3200 முதல் ₹9000 வரையிலும் ஏலம் போனது. ஆக மொத்தம் ₹1 கோடிக்கு பருத்தி விற்பனையானது.

Related Stories:

>