விவசாயிகள் சங்க கூட்டம்

கிருஷ்ணகிரி, மார்ச் 31: கிருஷ்ணகிரி அடுத்த குருபரப்பள்ளியில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சுப்பிரமணி தலைமை வகித்தார். துணை தலைவர் காவேரி, மாவட்ட செயலாளர் சப்பங்கிராமரெட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ஜெயவேல் வரவேற்றார். கூட்டத்தில் மாநில துணைத் தலைவர் கிருஷ்ணன், மாநில பிரசார குழுத் தலைவர் விஜயகாந்த், மாநில சட்ட ஆலோசகர் சதாசிவன் ஆகியோர் பங்கேற்று பேசினர். கூட்டத்தில், மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை நீக்க வலியுறுத்தி விவசாயிகள் நடத்திய போராட்டத்தை கண்டுகொள்ளாத மத்திய பாஜ அரசு கூட்டணியில் உள்ள எந்த கட்சிக்கும் தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் மாவட்ட, ஒன்றிய கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். பொதுச்செயலாளர் அண்ணாமலை நன்றி கூறினார்.

Related Stories:

>