கிரிக்கெட் சங்கம் நடத்தும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி

கிருஷ்ணகிரி, மார்ச் 31:கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் “கே” கோப்பைக்கான 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

நாக் அவுட் முறையில் நடைபெறும் இந்த போட்டியில் முதல் இரண்டு இடம் பிடிக்கும் அணிகள் கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் லீக் போட்டியின் (2021-22) இரண்டாவது டிவிசனில் கலந்துகொள்ள தகுதி பெறும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசிக்கும் அல்லது கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் நபர்கள் (உரிய ஆவணங்களுடன்) மட்டுமே இந்த போட்டிகளில் கலந்துகொள்ள இயலும். மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்ட லீக் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் இப்போட்டியில் விளையாட அனுமதியில்லை. அணிகளை பதிவு செய்ய தேவையான படிவத்தை கிருஷ்ணகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம், 33, கே.தியேட்டர் ரோடு, கிருஷ்ணகிரி என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். அணியை பதிவு செய்ய வரும் 12.4.2021ம் தேதி கடைசி நாளாகும். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>