தர்மபுரி அருகே லாரி அதிபர் கொலையில் கைதான 4 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது

தர்மபுரி, மார்ச் 31: தர்மபுரி அருகே நிர்வாண நிலையில் லாரி அதிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரை குண்டாசில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் சுண்ணாம்புகார தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (42). லாரி அதிபரான இவருக்கு மனைவி கவுரம்மாள், 3 மகள், ஒரு மகன் உள்ளனர். மூன்று மகளுக்கும் திருமணம் ஆகிவிட்டது. சுரேஷ்குமாருக்கு 4 லாரிகள் உள்ளது. இந்த லாரியின் நிர்வாகத்தை அதேபகுதியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பிஎஸ்சி பட்டதாரி அரவிந்த்குமார் (23). என்பவர் கவனித்து வந்தார். இந்நிலையில் கடந்த பிப்ரவரி 2ம் தேதி அதியமான்கோட்டை பை-பாஸ் சாலையில் வாகனங்கள் மோதி லாரி அதிபர் சுரேஷ்குமார் நிர்வாண நிலையில் சடலமாக கிடந்தார். சடலத்தின் மீது பல வாகனங்கள் ஏறி முகம், மார்பு, கை பகுதிகள் சிதைந்து காணப்பட்டது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டிருப்பதும் போலீசாரின் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது. தர்மபுரி டவுன் போலீசார் கொலை வழக்கா பதிவு செய்தனர்.

தர்மபுரி எஸ்பி பிரவேஸ்குமார் உத்தரவின்பேரில் தனிப்படை அமைக்கப்பட்டது. இது தொடர்பாக 5பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். இதில், முக்கிய குற்றவாளியாக லாரியின் நிர்வாகத்தை கவனித்து வந்த, பென்னாகரம் சுண்ணாம்புக்கார தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் அரவிந்த்குமார் (23).என்பரை போலீசார் கைது செய்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த அரவிந்த்குமார் நண்பர்கள் தேவன் மகன் கோவிந்தராஜ் (28), ஆனந்தன் மகன் எல்லப்பராஜ் (21), தமிழ்செல்வன் மகன் கார்த்திக் (27) ஆகியோரை போலீசார் கைது செய்து, சேலம் சிறையில் அடைத்தனர்.

சுரேஷ்குமாரின் 4 லாரிக்கும் ஓனர் ஆக அரவிந்த்குமாருக்கு ஆசை வந்தது. அரவிந்த்குமார் நண்பர்கள் உதவியுடன் கொலை செய்து, வாகனத்தை விட்டு ஏற்றி கொலை செய்தது தெரியவந்தது. இந்த கொடூர கொலையில் சிக்கிய நான்கு பேரையும் குண்டாசில் அடைக்க எஸ்பி பிரவேஸ்குமார், மாவட்ட கலெக்டர் கார்த்திகாவுக்கு பரிந்துரை செய்தார்.இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் ேபரில், கொலை செய்த முக்கிய குற்றவாளியான அந்தவிந்த்குமார், கொலைக்கு உதவிய நண்பர்கள் எல்லப்பராஜ், கோவிந்தராஜ், கார்த்திக் ஆகியோரை நேற்று குண்டாசில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories:

More