×

குளித்தலை சட்டமன்ற தொகுதி வாக்குசாவடிகளுக்கு அனுப்பும் வாக்கு இயந்திரத்தில் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்

குளித்தலை, மார்ச் 31: தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுவதையொட்டி கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதியில் இறுதி வெற்றி வேட்பாளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டது அதன்படி வேட்பாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட சின்னங்கள் அடிப்படையில் குளித்தலை தொகுதியில் இருபத்தி 28 மண்டலங்களில் 312 வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் வாக்கு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணிக்கு தேர்தல் அலுவலரும் குளித்தலை சார் ஆட்சியர் மாண ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் உதவி தேர்தல் அலுவலர் கலியமூர்த்தி மண்டல தேர்தல் அலுவலர் வைர பெருமாள் ஆகியோர் முன்னிலையில் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்தது.

வாக்குச் சாவடிகளுக்கு செல்லும் வாக்கு இயந்திரங்களுக்கு சின்னம் பொருத்தும் பணி நேற்று காலை தொடங்கியது அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு மண்டல அலுவலர்களுக்கும் முறையாக இட ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு தேவையான எழுது பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் அடங்கிய தொகுப்பு கொடுக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு அதிகாரிகளையும் அழைத்து வாக்குப் பெட்டி மற்றும் வேட்பாளர் சின்னம் பொருத்தும் பணிக்கு தேவையான பொருட்கள் அனைத்தும் கொடுக்கப் பட்டு குளித்தலை சட்டமன்றத் தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் முகவர்களை அழைத்து வாக்கு பெட்டிகளுக்கு சின்னம் பொருத்தும் பணியை பார்வையிட வைத்தனர்.

அப்போது வாக்குப் பெட்டிகள் சரியாக எண்ணிக்கையில் செயல்படுகிறதா என மாதிரி வாக்கு பெட்டி வைக்கப்பட்டு அதில் போடப்படும் வாக்குகள் சரியான எண்ணிக்கையில் உள்ளதா ஒவ்வொரு வேட்பாளர் சின்னத்திலும் எத்தனை வாக்குகள் போடப்பட்டது என்ற விபரம் தெரிந்துகொண்ட பின்னரே அனைத்து முகவர்கள் முன்னிலையில் வாக்கு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் பணி நடைபெற்றது .

Tags : Bath Assembly ,
× RELATED ஆத்ம நேச ஆஞ்சநேயர் கோயிலில் ராம நவமி விழா