×

அரவக்குறிச்சியில் 10 நாட்களாக குழாய் உடைந்து வீணாகும் குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

அரவக்குறிச்சி, மார்ச் 31: அரவக்குறிச்சியில்பூப்பந்தல் தெரு பிரிவுக்கு எதிரே குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான குடிநீர் 10 நாட்களாக சாலையோரம் ஓடி வீணாகின்றது. உடனடியாக சீரமைக்க பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மரவாபாளயம் காவிரி ஆற்றிலிருந்து காவிரி கூட்டுக்குடிநீர்அரவக்குறிச்சி பேருராட்சிக்கு வந்து மேல் நிலைத் தொட்டியில் நிரப்பப்படுகின்றது. அரவக்குறிச்சியில் 15 வார்டுகளிலும் உள்ள வீடுகளுக்கும் பூமிக்கடியில் பைப் மூலம் கொண்டு சென்று வினியோகிக்கப் படுகின்றது. இந்நிலையில் அரவக்குறிச்சி பேருந்து நிலைய சாலையில் பூப்பந்தல் தெரு பிரிவுக்கு எதிரே சாலையோரம் குடிநீர் குழாய் உடைந்தது.

இதிலிருந்து கடந்த பத்து நாட்களாக ஏராளமாக குடிநீர் வெளியேறி சாலையோரம் ஓடி சாக்கடையில் வழிந்து வீணாகின்றது. மேலும் இதனால் தேங்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி பரவும் அபாயம் உள்ளது. கோடை காலம் துவங்கி கடும் வெயிலடிக்கும் இந்த நேரத்தில் மாவட்டம் முழுவதும் வறட்சியான நிலையில், குடிநீர் பற்றாக் குறையான தற்போது குடிநீர் தெருவில் ஓடி வீணாகும் அவலமான நிலை உள்ளது. கடந்த 10 நாட்களாக இதுவரையிலும் சரி செய்யாமல் உள்ளதாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர். இனிமேலாவது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கவனித்து குடிதண்ணீர் வீணாகாமல் தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Aravakurichi ,
× RELATED பூக்களும், காய்களும் அதிகமாக பருத்தி...