வாலாஜாபாத்தை முதல்நிலை பேரூராட்சியாக மாற்றுவேன்: உத்திரமேரூர் தொகுதி அமமுக வேட்பாளர் வாக்குறுதி

காஞ்சிபுரம், மார்ச் 30: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உத்திரமேரூர் தொகுதி அமமுக வேட்பாளர் ஆர்.வி.ரஞ்சித்குமார் குக்கர் சின்னத்திற்கு வீதிவீதியாக நடந்துசென்று வாக்கு சேகரித்தார்.காஞ்சிபுரம் மாவட்டத்தில், உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத்தில் உள்ள 15 வார்டுகளுக்கும் வீதி வீதியாக நடந்து சென்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் வாக்காளர்களிடம் தெரிவித்ததாவது: நான் மற்ற வேட்பாளர்களைப் போல் இல்லை, வித்தியாசமானவன், அரசியல் மூலம் சம்பாதிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு, விவசாயம், வியாபாரம் இருக்கிறது. நான் வெற்றிபெற்றால் உத்திரமேரூர் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். எனக்கு ஒதுக்கப்படும் ரூ.2 கோடி தொகுதி மேம்பாட்டு நிதியை கமிஷன் வாங்காம மக்களுக்காக பயன்படுத்துவேன்.  அரசியல்வாதிகள் டெண்டரில் 20 சதவீதம் கமிஷன் எடுக்கிறார்கள். என்னை தேர்ந்தெடுத்தால் கமிஷன் வாங்காமல் மக்கள் பணம் மக்களுக்கே சென்றடைய  பாடுபடுவேன், தரமான சாலைகள், பாலங்கள் அமைத்துத் தருவேன். வாலாஜாபாத்திற்கு பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வருவேன். வாலாஜாபாத்தை முதல்நிலை பேரூராட்சியாக மாற்றுவேன். முத்தியால்பேட்டை ஊராட்சியில் 400 டாய்லெட் கட்டிக் கொடுக்கப்பட்டு சிறப்பாக செயல்படுகிறது. இதற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது. அதேபோல இந்தத் தொகுதி முழுவதையும் சிறப்பாக கொண்டுவருவேன். எனவே, எனக்கு குக்கர் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச்செய்ய வேண்டுகிறேன் என்று தெரிவித்தார்.

இந்தப் பிரசாரத்தின்போது, ஒன்றிய செயலாளர்கள்.,தம்மனூர்,தாஸ், வேளியூர் தனசேகரன், கூரம் பச்சையப்பன்,  மற்றும்  உத்திரமேரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஆலஞ்சேரி கமலக்கண்ணன், வாலாஜாபாத் பேரூராட்சி செயலாளர் சந்தீப், உத்திரமேரூர் மேற்கு செயலாளர் பாபு, உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் சுரேஷ், தேவராஜ், பேரூராட்சி கழகச் செயலாளர் கார்த்திக், மாவட்ட மகளிரணி வரலட்சுமி, பொதுக்குழு உறுப்பினர் மாதவன் தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் இராதாகிருஷ்ணன் தேமுதிக.மாவட்ட துணை செயலாளர் அருண்குமார், காஞ்சிபுரம் ஒன்றிய செயலாளர்கள் காலூர் என்.எஸ் நந்தகுமார், விப்பேடு கிருபாகரன், வாலாஜாபாத் ஒன்றிய செயலாளர்கள் பொன்னுரங்கம், ராமலிங்கம், உத்திரமேரூர் ஒன்றிய செயலாளர் அழிசூர் கன்னியப்பன், நகர செயலாளர் சந்திரமௌலி , ஒன்றிய அவைத்தலைவர் உமாபதி , வாலாஜாபாத் பேரூர் செயலாளர் பழனிவேல்ராஜ்,  கிளை செயலாளர் பாபு, எஸ்டிபிஐ நிர்வாகி தமிமுன் அன்சாரி மற்றும் கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories: