கல்வி, வேலைவாய்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவேன்: அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் உறுதி

மதுராந்தகம், மார்ச் 30: கல்வி, வேலைவாய்ப்பு குறித்து தொகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவேன் என மதுராந்தகம் தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்குறுதியளித்தார். மதுராந்தகம் சட்டமன்ற தனி தொகுதி அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் நேற்று மதுராந்தகம்  ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, வேட்பாளருடன் அதிமுக மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் முதுகரை கார்த்திக், மற்றும் நிர்வாகிகள், பாட்டாளி மக்கள் கட்சி மாநில துணை பொது செயலாளர் பொன்.கங்காதரன், மாவட்ட செயலாளர் கோபாலகண்ணன், மாநில மாணவரணி துணை செயலாளர் சத்ரியன் சதீஷ், ஒன்றிய செயலாளர் சிவலிங்கம், மாவட்ட துணை செயலாளர்கள் முதுகரை சங்கர்,  நடராஜன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எண்டத்தூர் வேலு, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பரத்குமார், ஒன்றிய இளைஞர் அணி துணை செயலாளர் செல்வம், ஜீவா மற்றும் பாரதிய ஜனதா, தமிழ் மாநில காங்கிரஸ், புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மதுராந்தகம் ஒன்றியத்தில் உள்ள குன்னத்தூர், தச்சூர், கீழ்ப்பட்டு, வீராணகுண்ணம், காவாதூர், முருக்கம்பாக்கம், மாரிபுத்தூர், கம்சலாபுரம், விளாகம், முருக்கன்சேரி, தேவாதூர், அருங்குணம், சோழந்தாங்கல், கெண்டிரச்சேரி, வில்வராயநல்லூர், முதுகரை, வசந்தவாடி, ஆமையம்பட்டு, புலிக்கொரடு, தாதங்குப்பம், சரவம்பாக்கம் கூட்ரோடு, கொளத்தூர், நல்லாமூர், கீழ்கரணை, காட்டுதேவாதூர், கொல்லம்பாக்கம், நெட்ரம்பாக்கம், அண்ணாநகர், சித்தாமூர், சாமந்திபுரம் உள்ளிட்ட கிராமங்களில் வீதியாக சென்று அதிமுக வேட்பாளர் மரகதம் குமரவேல் வாக்கு சேகரித்தார்.அப்போது, வேட்பாளருக்கு பொதுமக்கள் மேளதாளங்கள் முழங்க பூ தூவி உற்சாக வரவேற்பளித்தனர். மரகதம் குமரவேல் பேசுகையில், ‘கிராமங்களில் வசிக்கும் சொந்த வீட்டுமனை இல்லாத ஏழை எளியோருக்கு அரசு திட்டங்களின் மூலம் இலவச வீட்டு மனைகளை பெற்றுத்தருவேன், குடிநீர் தெருவிளக்கு, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகள் மேம்பாடு அடைய தீவிர நடவடிக்கை எடுப்பேன். கல்வி, வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தி அவர்களின் பொருளாதாரநிலை ஏற்றம் பெற செய்வேன்’ என்றார்.

Related Stories:

>