×

நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்க நடவடிக்கை: பாமக வேட்பாளர் திருக்கச்சூர் கே.ஆறுமுகம் உறுதி

திருக்கழுக்குன்றம், மார்ச் 30: மணமை - குன்னத்தூர் இடையே பல ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுப்போன் என திருப்போரூர் பாமக வேட்பாளர் திருக்கச்சூர் கே.ஆறுமுகம் உறுதியளித்தார்.
திருப்போரூர் தொகுதி பாமக வேட்பாளர் திருக்கச்சூர் கே.ஆறுமுகம் திருப்போரூர் தொகுதிக்குட்பட்ட திருக்கழுக்குன்றம் ஒன்றியத்தில் அடங்கிய கடும்பாடி, மணமை, குன்னத்தூர், சதுரங்கப்பட்டினம், நெய்குப்பி, நத்தம் கரியச்சேரி, முள்ளிக் கொளத்தூர், கொக்கிலமேடு உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்தார். கிராமங்களிலெல்லாம்  வேட்பாளர் திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு பொதுமக்களும், கூட்டணி கட்சியினரும் வெடி, வெடித்து உற்சாக  வரவேற்பு அளித்தனர். அப்போது, மணமை கிராமத்திலிருந்து  மலைமேடு வழியாக குன்னத்தூர் கிராமத்திற்கு  சென்றிருந்த அரசுப்பேருந்து பல ஆண்டுகளாக  நிறுத்தப்பட்டது. இதனால், பொதுமக்கள் பெரும் அவதிப்படுவதால் நிறுத்தப்பட்ட  அந்த பஸ்சை மீண்டும் இயக்க வழிவகை செய்ய வேண்டுமென்று வேட்பாளரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனை கேட்ட வேட்பாளர் ஆறுமுகம்,  ‘நிறுத்தப்பட்ட பேருந்து இவ்வழியாக உடனடியாக இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்தார். வாக்கு சேகரிப்பின்போது,   செங்கல்பட்டு அதிமுக மாவட்ட செயலாளர் எஸ்.ஆறுமுகம், பாமக மாவட்ட செயலாளர் காரணை ராதாகிருஷ்ணன், மாவட்ட தலைவர் நல்லாத்தூர் பார்த்தசாரதி, மாவட்ட துணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன், பட்டிக்காடு ராஜேந்திரன் பாமக நிர்வாகிகள்  கணேசமூர்த்தி, கடும்பாடி சுரேஷ் மற்றும் அதிமுக  ஒன்றிய செயலாளர் மாமல்லபுரம் ஜி.ராகவன் மற்றும்  பாஜ, புரட்சி பாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : BJP ,Thirukkachur ,K. Arumugam ,
× RELATED கன்னியாகுமரிக்கு வருகை தரும் பிரதமர்...