×

கிராமங்களில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை: மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா வாக்குறுதி

மதுராந்தகம், மார்ச் 30: மதுராந்தகம் தனி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில், மதிமுக வேட்பாளர் மல்லை சத்யா அச்சிறுப்பாக்கம் தெற்கு ஒன்றியம் புதுப்பேட்டை ஊராட்சியில்  வாக்கு சேகரிக்க சென்றார்.
அப்போது, திமுக ஒன்றிய செயலாளர் கண்ணன்,  ஒன்றிய மகளிர் அணி  மாலதி உள்ளிட்ட பெண்கள்  ஆரத்தி எடுத்து  வரவேற்றனர். மேலும்,  காங்கிரஸ் கட்சி  மாவட்ட பொருளாளர்  தமிழ்ச்செல்வன் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகளுடன்  சேர்ந்து  மாலை அணிவித்து  பட்டாசு வெடித்து  வரவேற்பளித்தனர். இந்நிகழ்ச்சியில்,  மாநில  பொது செயலாளர்  பி.வி.தமிழ்ச்செல்வன், வட்டார தலைவர் கந்தசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகி கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து பள்ளி பேட்டை ஊராட்சிக்கு சென்ற வேட்பாளர் மல்லை சத்யாவிற்கு ஒன்றிய துணை செயலாளர் ரத்தினவேலு ஏற்பாடு செய்தார். இதில், ஏராளமான பெண்கள் மலர்தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.

வேட்பாளர் மல்லை சத்யா பேசுகையில், இந்த ஊராட்சியில் 350க்கும் மேற்பட்டோர் பட்டா கேட்டு உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற நிகழ்ச்சியில் மனுக்கள் கொடுத்துள்ளீர்கள். திமுக ஆட்சி அமைந்தவுடன் 100 நாட்களில் இந்த மனுக்களுக்கு தீர்வு எட்டப்பட்டு பட்டா வழங்கப்படும் என உறுதியளித்தார்.  இதனை தொடர்ந்து நேமம், அத்திவாக்கம், காட்டுக்கூடலூர் திருமுக்காடு, சீதாபுரம், உள்ளிட்ட கிராமங்களில் வாக்கு சேகரித்து விட்டு திம்மாபுரம் ஊராட்சிக்கு சென்றபோது காஞ்சி தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் கோகுலக்கண்ணன் ஏற்பாடு செய்த வாக்கு சேகரிப்பு நிகழ்ச்சியில் வேட்பாளர்  மல்லை சத்யாவிற்கு  திமுகவினர் உள்ளிட்ட ஏராளமான கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதேபோன்று அந்த ஊராட்சியில் அச்சிறுப்பாக்கம் மத்திய வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது, மாவட்ட பொதுச்செயலாளர் என்.கோட்டீஸ்வரன் மாவட்ட துணைத்தலைவர் ராதாகிருஷ்ணன், கிராம கமிட்டி தலைவர் கோபிநாத் மற்றும் தனசேகர் உள்ளிட்டோர் வேட்பாளருக்கு  மேளதாளம் முழங்க ஆரத்தி எடுத்து சிறப்பான வரவேற்பளித்தனர்.  வேட்பாளர் மல்லை சத்யா பேசுகையில்,  ‘கிராமங்களுக்கு செல்லுகின்ற இடங்கள் எல்லாம் கிராம மக்கள் குடும்பம் குடும்பமாக வந்து வரவேற்கிறார்கள். மகிழ்ச்சி பொங்க புன்னகையோடு தங்களுடைய ஆதரவை உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க போகிறோம்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.

எனவே, தமிழ்நாட்டில் மக்கள் விரோத ஆட்சி நடத்தி இருக்கின்ற  அதிமுக பாஜ கூட்டணிக்கு கவுண்ட்டவுன் தொடங்கி இன்னும் 8 நாட்களில் அந்த கவுண்ட்டவுன் நிறைவு பெற்று தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் மே 2ம் தேதிக்கு பிறகு  பொறுப்பு ஏற்பார்.  இந்த பகுதியில் ஆயிரம் ஏக்கர் பாசன வசதி கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்பது விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. திமுக ஆட்சி அமைந்தவுடன் இந்த ஏரியை தூர்வாரி சீரமைத்து தரப்படும். மேலும், இந்த கிராமத்தில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளதாக கூறி உள்ளீர்கள். இந்த சாலையும் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு அளியுங்கள்’ என்றார். இதில், அச்சிறுபாக்கம் பேரூர் செயலாளர் உசேன், மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளர் சிவக்குமார், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் எழிலரசன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் ஜியாவுதீன், ஒன்றிய துணை செயலாளர் பேக்கரி ரமேஷ்,  ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்  ராம்,  காஞ்சிபுரம் மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி, பொருளாளர் சங்கரன், தொகுதி பொறுப்பாளர் ராமலிங்கம், ஒன்றிய செயலாளர் கோபி, நகர செயலாளர் ராஜி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : Madhyamaka ,Mallai Satya ,
× RELATED குங்பூ மாஸ்டர் சேகரின் நினைவு...