பெண்கள் நலன்காக்கும் திட்டங்களை கொண்டுவந்தது திமுக ஆட்சி: வாக்கு சேகரிப்பின்போது காஞ்சிபுரம் திமுக வேட்பாளர் பெருமிதம்

காஞ்சிபுரம், மார்ச் 30: காஞ்சிபுரம் சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளராகப் போட்டியிடும் வக்கீல் எழிலரசன் வாலாஜாபாத் வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட வையாவூர், களியனூர், செட்டியார்பேட்டை, வேடல் உள்ளிட்டசுமார் 25க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இந்தப் பிரசாரத்தை காஞ்சிபுரம் தொகுதி எம்பி சிறுவேடல் ஜி.செல்வம் தொடங்கி வைத்தார். அப்போது விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயிகளை சந்தித்த வேட்பாளர் வக்கீல் எழிலரசன், திமுக ஆட்சிக்கு வந்தவுடன், விவசாயிகளின் விளைபொருளுக்கு கட்டுப்படியான விலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், தேவைப்படும் இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும், விவசாயிகள் நலன்காக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எண்று தெரிவித்தார்.

மேலும் பெண்களைச் சந்தித்த அவர், பெண்கல்விக்கு முக்கியத்துவம், பெண்களுக்கு சொத்துரிமை உள்ளிட்ட பெண்கள் நலன்காக்கும் திட்டங்களை கொண்டுவந்த திமுகவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இந்தப் பிரசாரத்தின்போது, ஒன்றிய செயலாளர் எஸ்.பி.பூபாலன், அவைத்தலைவர் பழனி, மாவட்ட விவசாயத் தொழிலாளர் அணி வேதாசலம், தேவேந்திரன், கவிதா டில்லி, படுநெல்லி பாபு, பொருளாளர் சங்கர்,  ஆறுமுகம், பரந்தாமன் மற்றும் திமுக கூட்டணிக் கட்சிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளைச் சேர்ந்த ஏராளமானோர் உடன் சென்றனர்.

Related Stories:

>