×

பராமரிப்பு பணிகள் காரணமாக பட்டாபிராம், இந்து கல்லூரி நிறுத்தத்தில் இன்று ரயில் நிற்காது

சென்னை, மார்ச் 30: பட்டாபிராம் ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால் இன்று பட்டாபிராம், இந்துக் கல்லூரி ரயில் நிலையங்களில் மின்சார ரயில்கள் நிற்காது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்ட்ரலிலிருந்து காலை 9.30, 9.45, 11.30, பிற்பகல் 12, 1 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள், சென்ட்ரலிலிருந்து காலை 9.50, 11.05, பிற்பகல் 12.50 மணிக்கு அரக்கோணம் வரை இயக்கப்படும் ரயில்கள், சென்ட்ரலிலிருந்து காலை 10 மணி மற்றும் 11.45 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில்கள், சென்ட்ரலிலிருந்து காலை 10.30 மற்றும் பிற்பகல் 12.10 மணிக்கு கடம்பத்தூர் வரை இயக்கப்படும் ரயில்கள், வேளச்சேரியிலிருந்து காலை 9.05 மற்றும் பிற்பகல் 12.15 மணிக்கு திருவள்ளூர் வரை இயக்கப்படும் ரயில்கள, வேளச்சேரியிலிருந்து காலை 11.20 மணிக்கு திருத்தணி வரை இயக்கப்படும் ரயில்,சென்னை கடற்கரையிலிருந்து காலை 10.20 மணிக்கு சென்னை கடற்கரை வரை இயக்கப்படும் சுற்றுவட்டப் பாதை ரயில் ஆகிய 16 ரயில்கள் இந்துக் கல்லூரி மற்றும் பட்டாபிராம் ஆகிய ரயில் நிலையங்களில் இன்று நிற்காது. அதைப்போன்று புறநகர் சிறப்பு ரயில்கள் இந்து கல்லூரி ரயில் நிலையத்தில் நிற்காமல் செல்லும் ரயில்கள் வேளச்சேரியிலிருந்து காலை 9.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை இயக்கப்படும் ரயில், சென்னை சென்ட்ரலிலிருந்து காலை 11.15, பிற்பகல் 12.20, 1.15 மணிக்கு பட்டாபிராம் மிலிட்டரி சைடிங் வரை இயக்கப்படும் ரயில்கள் ஆகிய 4 புறநகர் ரயில்கள் இந்துக் கல்லூரி ரயில் நிலையத்தில் இன்று நிற்காமல் இயக்கப்படும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.


Tags : Bhattapram ,Hindu College ,
× RELATED திருவள்ளூர் தொகுதிக்கான...