பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் திருத்தணி கோ.அரிக்கு கிராம மக்கள் வரவேற்பு

பள்ளிப்பட்டு, மார்ச் 30: திருத்தணி தொகுதி அதிமுக வேட்பாளரும், அதிமுக அமைப்பு செயலாளருமான  திருத்தணி கோ.அரி பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் உள்ள  சொரக்காய்பேட்டை,  அத்திமாஞ்சேரி, கர்லம்பாக்கம், மேலப்பூடி, ராமாபுரம், கொத்தகுப்பம் உள்ளிட்ட  கிராம பகுதிகளில்  வீதி வீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு, பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து உற்சாகமாக வரவேற்றனர். கோணசமுத்திரம் கிராமத்தில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டது.  அக்கட்சியின் ஒன்றிய செயலாளர் பி.நாகூர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட  புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்தும் மலர் மாலை அணிவித்தும் வரவேற்றனர்.  அப்போது,  திருத்தணி கோ.அரி பேசியதாவது, “எடப்பாடி பழனிசாமி   பல்வேறு  மக்கள் நல திட்டங்கள் செயல்படுத்தி சமுதாயத்தில் அனைத்து தரப்பு மக்களும் ஏற்றம் பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார்.

சட்டமன்ற பொது தேர்தலில் மீண்டும் அதிமுக ஆட்சி வெற்றி பெற்று ஜெயலலிதா ஆட்சி தொடரவும், வளர்ச்சி திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தவும், தேர்தல் வாக்குறுதிகளாக  விலையில்லா அம்மா வாஷிங்மெஷின்,  குடும்ப தலைவிக்கு  மாதம் தோறும் ₹1500, முதியோர் உதவித் தொகை ₹2 ஆயிரம், ஆண்டுக்கு 9 எரிவாயு சிலிண்டர் இலவசமாக  பெற்றிட இரட்டை இலை சின்னத்தை ஆதரித்து வெற்றி பெற செய்ய வேண்டும்,” இவ்வாறு அவர் பேசினார்.

இதில், ஆவின் தலைவர் வேலஞ்சேரி கவிச்சந்திரன், ஒன்றிய செயலாளர்  டி.டி.சீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் சாந்திபிரியா சுரேஷ்,  ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சிட்டி கிருஷ்ணமநாயுடு,  மாவட்ட இளைஞரணி இணை செயலாளர் ஜி.பெருமாள், பாமக  மாவட்ட செயலாளர் மணி, மாவட்ட துனை செயலாளர் லோகன், ரமேஷ், பாஜ ஒன்றிய தலைவர் எஸ்.கே.ஏகநாதன், அதிமுக நிர்வாகிகள்  கண்ணைய்யா, ஏகாம்பரம், கருணாகரன், செல்வி சரவணன்,  புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள்  பாபு, பிரகாஷ் ரவிக்குமார், ஞானசேகர், திருவேங்கடம், சங்கர், பிரேம்குமார், கவியரசு, பி.ஜான், பஞ்சா, ஆனந்தன், மனோகர் உட்பட கூட்டணி கட்சியினர் பெரும் திரளாக கலந்துக்கொண்டனர்.  

Related Stories:

>