பகுஜன் சமாஜ் கட்சிக்கு வாக்களித்தால் கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு அனைத்தும் சமமாக கிடைக்கும்

திருவள்ளூர், மார்ச் 30: பகுஜன் சமாஜ் கட்சியின் பூந்தமல்லி தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் ஏ.சி.சத்தியமூர்த்தி திருவள்ளூர் ஒன்றியம், செவ்வாபேட்டை, வேப்பம்பட்டு, தொட்டிக்கலை, கிளாம்பாக்கம், தண்டலம், வெள்ளகுளம், தண்ணீர் குளம், தொழுவூர், காக்களூர், ராமாபுரம், புட்லூர் ஆகிய கிராமங்களில் பிரசாரத்தை தொடங்கி வீடு, வீடாக சென்று யானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அப்போது வேட்பாளர் ஏ.சி.சத்தியமூர்த்தி பேசும்போது, “பகுஜன் சமாஜ் கட்சிக்கு யானை சின்னத்திற்கு வாக்களித்தால் உங்கள் குழந்தைகளுக்கு சரியான கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பு இவை அனைத்தும் அரசியலமைப்பு சட்டத்தில் அனைத்து மக்களுக்கும் சமமாக கிடைக்கும். மக்கள் நலன்களை பாதுகாக்க உண்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுத்து சட்டமன்றத்திற்கு அனுப்புங்கள். தேர்தல் என்பது அதிகாரத்தை தனிநபரிடத்தில் கொண்டுபோய் குறிப்பதற்காக நடத்தப்படுவது அல்ல. மாறாக, அனைத்து மக்களுக்கும் அதிகாரப்பகிர்வை ஏற்படுத்தவே நடத்தப்படுவதாகவும். நாட்டில் சமூகப் புனரமைப்பையும், பொருளாதார மேம்பாட்டையும் ஏற்படுத்தும் நோக்கத்துடன் பகுஜன் சமாஜ் கட்சி இந்த 2021ல் சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறது. எனவே நீங்கள் அனைவரும் எனக்கு யானைச் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்,” என்றார்.

இந்த வாக்கு சேகரிப்பில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் எஸ்.சந்திரசேகர், மாவட்ட பொதுச்செயலாளர் பகுஜன் பிரேம், அம்பேத் ஆனந்தன், வீரா விஜி, ஆர்.டில்லி, வழக்கறிஞர் ராஜேஷ், சித்துக்காடு ரவிக்குமார், கவி, ஆனந்தன், வெற்றிவேந்தன், ராஜ், சுரேஷ்,கபிலன்,  நாகராஜன், இளங்கோ, சாலமோன், கீழானூர் ராசா, கவி, விஜய், தமிழ், சரண்ராஜ், முகேஷ், பிரபா பாட்ஷா, ரஞ்சித் காக்கலூர் ஈசாக், வேல்முருகன், தீபன், தமிழரசன், ஜெய்பீம் ஜெய், பிரேம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள், தொகுதி பொறுப்பாளர்கள், செக்டார் பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: