×

5 ஆண்டில் ஏராளமான வளர்ச்சிப்பணி: இ.கருணாநிதி பிரசாரம்

தாம்பரம்: பல்லாவரம் தொகுதி திமுக வேட்பாளர் இ.கருணாநிதி நேற்று மாலை பொழிச்சலூர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, அவர் மக்கள் மத்தியில் பேசுகையில், பொழிச்சலூர் ஊராட்சி சென்னை விமான நிலையம் அருகே இருந்தாலும், போதிய வருமானம் இல்லாததால் இந்த பகுதியில் சாலை, குடிநீர் என எதுவும் இல்லாமல் 40 ஆண்டு காலமாக மிகவும் பின்தங்கிய பகுதியாகவே இருந்தது.நான் சட்டமன்ற உறுப்பினராக பொறுப்பேற்றவுடன் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு நிதியை பெற்று இந்த பகுதிகளில் புதிய தார் சாலைகள், சிமென்ட் சாலைகள், மழைநீர் கால்வாய்கள், நீர்த்தேக்க தொட்டிகள் மற்றும் எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சிறு மின்விசை நீர்த்தேக்க தொட்டிகள், குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் என 40 ஆண்டுகளாக பின்தங்கியிருந்த பகுதியை 5 ஆண்டுகளில் வளர்ச்சி அடைய செய்துள்ளேன்.

மேலும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை மேற்கொள்ள உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மீண்டும் என்னை வெற்றி பெறச்செய்ய வேண்டும்,’ என்றார். தொகுதி பொறுப்பாளர் மீ.அ.வைத்தியலிங்கம், புனித தோமையார் மலை வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் ஜெயக்குமார், தொமுச பொன்ராம், ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர் செல்வராஜ், மதிமுக மாவட்ட செயலாளர் மா.வை.மகேந்திரன், கிளை செயலாளர்கள் வனஜா தயாளன், ராஜா, பிரபாகரன், ராஜாமணி, குமார், ஜோசப், வீரராகவன் உட்பட திமுக மற்றும் கூட்டணி கட்சிகளை சேர்ந்த ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : E. Karunanidhi ,
× RELATED திமுக வேட்பாளரை ஆதரித்து பிரசாரம்...