இளைஞர்கள் புதுவையை மாற்றுங்கள் கமல்ஹாசன் பேச்சு

புதுச்சேரி, மார்ச் 30:  புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சி தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நேற்று பிரசாரம் செய்தார். செஞ்சி சாலை சந்திப்பில் பிரசாரத்தை துவங்கும்போது அவரது மைக் வேலை செய்யவில்லை. 15 நிமிடங்கள் முயற்சித்தும் பலனில்லை. இதனால் டார்ச் லைட்டை காண்பித்து வாக்கு சேகரித்துவிட்டு புறப்பட்டார். தொடர்ந்து, புஸ்சி வீதி மணிக்கூண்டு, முதலியார்பேட்டை வானொலி திடல், அரியாங்குப்பம் சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளிலும் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:  பாரதியை போல புதுச்சேரி எனக்கும் சொந்தம்,எங்களின் வேட்பாளர்கள் மக்களில் ஒருவராக இருப்பார்கள். எனக்கு அரசியல் தொழில் கிடையாது, என்பதால் அரசியல் தெரியாது என்று கருத வேண்டாம். எங்களின் சிந்தனை மக்களின் நலன் மட்டுமே. மக்களின் சேவையில் இருந்தவர்களை வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம். எங்கள் வேட்பாளர்களை தேர்வு செய்தால் புதுச்சேரி அரசியல் புது பொலிவு பெறும். இளைஞர்கள், முதல் முறை ஓட்டு போட வருபவவர்கள் இதையெல்லாம் யோசித்து புதுவையை மாற்றுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: