×

கொரோனா மையமாக மாற்றியதற்கு எதிர்ப்பு விழுப்புரம் அரசு மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையால் பரபரப்பு

விழுப்புரம், மார்ச் 30: விழுப்புரம் நான்குமுனை சந்திப்பில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனை கொரோனா கால கட்டத்திற்கு பின்பு மீண்டும் முழுவதுமாக கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டது.
இதனால் பொது நோயாளிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படாததால் ஆத்திரமடைந்த ஜி.ஆர்.பி நகர் பகுதி மக்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். பின்னர் விழுப்புரம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறும்போது, மருத்துவமனை கொரோனா சிகிச்சை மையமாக மாற்றியதால் இந்த பகுதியில் விபத்து ஏற்பட்டால் 7 கிலோ மீட்டர் தூரம் உள்ள முண்டியம்பாக்கம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.  இதனால் அவசர சிகிச்சை பிரிவை மட்டும் இயக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவசர சிகிச்சை பிரிவு இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.  இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.



Tags : Villupuram ,Government Hospital ,Corona ,
× RELATED விழுப்புரம்-திருப்பதி ரயில் பகுதி ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு