×

மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் மலைவாழ் மக்களிடம் வாக்குசேகரிப்பு

உடுமலை, மார்ச் 30: மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் மலைவாழ் மக்களிடம் வாக்குசேகரிப்பில் ஈடுபட்டார். மடத்துக்குளம் தொகுதி திமுக வேட்பாளர் இரா.ஜெயராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் இரவு ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மாவடப்பு, குழிப்பட்டி, குருமலை உள்ளிட்ட மலைவாழ் கிராமங்களுக்கு சென்று பழங்குடியின மக்களிடம் வாக்குசேகரித்தார். அப்போது அவர்களுடன் அமர்ந்து குறைகளை கேட்டார். ஏற்கெனவே, மலைவாழ் கிராமங்களில் செய்யப்பட்டுள்ள வளர்ச்சி பணிகளை பற்றி அவர்களிடம் விளக்கினார். மேலும் திமுக ஆட்சிக்கு வந்தால் பழங்குடியின மக்களின் கோரிக்கை முழுமையாக நிறைவேற்றப்படும். பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும். 5 சவரன் வரை நகைக்கடன் ரத்து செய்யப்படும். மகளிர் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும். பெண்களுக்கு 40 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் செயல்படுத்தப்படும். விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிக்கப்படும். சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்கப்படும், என்றார். அவருடன் திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் சென்றனர்.

Tags : DMK ,Jayaramakrishnan ,Madathukulam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்