உடுமலை நகரில் வார்டு வார்டாக அமைச்சர் ராதாகிருஷ்ணன் பிரசாரம்

உடுமலை, மார்ச் 30: உடுமலை நகரில் வார்டு வார்டாகஅமைச்சர் ராதாகிருஷ்ணன் பிரசாரம் மேற்கொண்டார்.  உடுமலை தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் ராதாகிருஷ்ணன், உடுமலை நகரில் 29, 30, 33 ஆகிய வார்டுகளில் வீடு வீடாக சென்று வாக்குசேகரித்தார். மேலும் டி.வி.பட்டணம், யூனியன் ஆபிஸ், கருணாநிதி காலனி, தளி ரோடு, பழனியாண்டவர் மில்ஸ் பின்புறம் ஆகிய பகுதிகளில் வீதி வீதியாக சென்று இரட்டை இலைக்கு வாக்கு கேட்டார்.அப்போது அவர் பேசுகையில், அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 6 சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும். இலவச வாஷிங்மெஷின் வழங்கப்படும். குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1500 வழங்கப்படும். வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும்.

விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.7500 உழவு மானியம் வழங்கப்படும். முதியோர் உதவித்தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தப்படும்.  ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை 150 நாட்களாக விரிவுபடுத்தப்படும். ரேஷன் பொருட்கள் அனைத்தும் வீடு தேடி வரும். வீடு இல்லாதவர்களுக்கு விலையில்லா கான்கிரீட் வீடு, சூரிய சக்தி அடுப்பு வழங்கப்படும். கல்லூரி மாணவர்களுக்கு 2 ஜிபி டேட்டா இலவசமாக வழங்கப்படும். தாலிக்கு தங்கம் திட்டத்தில் உதவித்தொகை ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்படும், என்றார்.அவருடன் உடுமலை நகர செயலாளர் ஹக்கீம், யுகேபிஎன் ராதாகிருஷ்ணன், உதயகுமார், சசி, தனலட்சுமி மற்றும் வார்டு செயலாளர்கள், அனைத்து அணிகளின் நிர்வாகிகள் சென்றனர்.

Related Stories:

>