×

தொழிலாளர்களுடன் சேர்ந்து தேயிலை பறித்து வாக்கு சேகரித்த கூடலூர் திமுக வேட்பாளர்

பந்தலூர், மார்ச் 30: பந்தலூர் அருகே பாண்டியார் டேன் டீ தேயிலைத் தோட்டத்தில் திமுக வேட்பாளர் தொழிலாளர்களுடன் பசுந்தேயிலை பறித்து வாக்கு சேகரித்தார். சட்டமன்ற தேர்தல் வரும் 6ம் தேதி நடக்கிறது. இதையொட்டி, அரசியல் கட்சி வேட்பாளர்கள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் காசிலிங்கம் தற்போது சூறவளி பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த தொகுதியில் அரசு மற்றும் தனியார் தேயிலை ேதாட்டங்கள் அதிகம் என்பதால், தினமும் தொழிலாளர்கள் மத்தியில் வாக்கு சேகரித்து வருகிறார். நேற்று டேன்டீ பாண்டியார் அரசு தேயிலைத் தோட்ட பகுதிகளில் தொழிலாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது, தேயிலை தோட்ட தொழிலாளர்களுடன் இணைந்து வேட்பாளர் காசிலிங்கமும் தேயிலையை பறித்து தொழிலாளர்களுக்கு வழங்கினார். தொடர்ந்து அவர்களிடம் பேசுகையில்,`தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் டேன் டீ மக்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தேயிலை தோட்ட தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதேபோல், பசுந்தேயிலைக்கு உரிய விலை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தேயிலை ேதாட்ட தொழிலாளர்களின் கூட்டுறவு வங்கி கடன் தள்ளுபடி செய்திடவும், மீண்டும் வங்கி கடன் கிடைத்திடவும் நடவடிக்கை எடுக்கப்படும். கூடலூர் மற்றும் பந்தலூர் பகுதி மக்களின் அடிப்படை தேவைகள் அனைத்தும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

இதைத்தொடர்ந்து, டேன் டீ அனைத்து டிவிசன்களிலும் உள்ள தொழிலாளர்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதுதவிர, பாண்டியார் பகுதியில் உள்ள பொதுமக்களிடம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில், எல்பிஎப் தலைவர் மாடசாமி, மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் ஹாலன், மாவட்ட துணை அமைப்பாளர் ஜெயசீலன், சேகர், இன்பராஜ், நகராட்சி முன்னாள் தலைவர் அமிர்தலிங்கம் நிர்வாகிகள் பாலா, மகேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags : Cuddalore ,DMK ,
× RELATED கடலூர் பெண் இறப்பு குறித்து பொய்யான...