சிங்காநல்லூர் திமுக வேட்பாளர் கார்த்திக் எம்எல்ஏ நடனமாடி வாக்குசேகரிப்பு

கோவை, மார்ச் 30:  கோவை சிங்காநல்லூர்தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திக் எம்எல்ஏ எஸ்.ஐ.எச்.எஸ் காலனிக்கு உட்பட்டபகுதிகளில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் நடனமாடி வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசியதாவது: இப்பகுதியில் ரயில்வே கேட்டை பூட்டி பூட்டி திறந்தனர். இதனால், அவசர தேவைக்கு கூடபயன்படுத்த முடியாத நிலை இருந்தது. போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பாலம்கட்ட திமுக சார்பில் ரூ.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆரம்ப கட்ட பணிகள் நடந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.  பின்னர், வந்த ஆட்சியாளர்கள் கடந்த 10ஆண்டுகளாக பாலம் வேலையை கிடப்பில் போட்டு விட்டனர். இது தொடர்பாக நான் எம்எல்ஏ ஆனது முதல் தொடர்ந்து சட்டப்பேரவையில் பேசி வருகிறேன். நிலங்களை கையகப்படுத்த அரசு உரிய இழப்பீடு தராமல் இழுத்தடித்து வந்தனர். திமுக ஆட்சி வந்தவுடன் இதற்கான உரிய தீர்வு ஏற்படுத்தப்படும். இப்பகுதி மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படும். உங்களின் ஒரு வாக்கு கூட வீணடிக்காமல் உதய சூரியன் சின்னத்திற்கு அளிக்க வேண்டும்.

ஆளும் கட்சியாக திமுக வர போகிறது. திமுக-விடம் பெண்களுக்கு, இளைஞர்களுக்கு என பல்வேறு திட்டங்கள் உள்ளது. தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிைறவேற்றப்படும். வரும் தேர்தலில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெறவுள்ளது. எனவே, அனைவரும் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து வெற்றியை தேடி தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். இதில், பொறுப்பு குழு உறுப்பினர்முமாச.முருகன், பகுதி கழக செயலாளர்கள் எஸ்.எம்.சாமி, ஷேக் அப்துல்லா, பசுபதி வார்டு செயலாளர் நியான்குமார், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சுந்தரம், கல்யாணசுந்தரம், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மேகநாதன், காங்கிரஸ் கட்சி சார்பில் கருணாகரன், விடுதலை சிறுத்தைகள் சார்பில் விடுதலை அன்பன், திமுக பொறுப்புகுழு உறுப்பினர்கள் மனோகரன், ராஜா, சிங்கை பிரபாகரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>