திருச்செங்கோட்டில் வாக்கு எண்ணும் மையத்தில் தேர்தல் அலுவலர் ஆய்வு கூடுதலாக லிப்ட் வசதி ஏற்படுத்த உத்தரவு

திருச்செங்கோடு, மார்ச் 30: திருச்செங்கோட்டில் வாக்கு எண்ணும் மையத்தை தேர்தல் நடத்தும் அலுவலரும், கலெக்டருமான மெகராஜ் ஆய்வு செய்தார். அப்போது, கூடுதலாக லிப்ட் வசதி ஏற்படுத்துமாறு உத்தரவிட்டார். தமிழக சட்டப்பேரவை தேர்தலில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 6 தொகுதியில் 140 பேர் போட்டியிடுகின்றனர். மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் பதிவாகும் வாக்குகள், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில் உள்ள மையங்களில் எண்ணப்படுகிறது. இங்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைப்பதற்கான ஸ்ட்ராங் ரூம், வாக்கு எண்ணும் அறை, தபால் வாக்குகள் எண்ணும் அறை, பல்வேறு பொருட்களை வைக்க கூடுதல் பாதுகாப்பு அறை, வேட்பாளர்களின் முகவர்கள், அரசு அலுவலர்கள், பாதை வசதி உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் பாதுகாப்பு அறையில் வைப்பதற்காக கொண்டு வரப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஏற்றி வரும் வாகனங்கள் நிறுத்துவதற்கான இடத்தையும், பணியாளா–்கள் செல்வதற்கான பாதைகளையும், வாக்கு பதிவின் போது பயன்படுத்தப்பட்ட பல்வேறு பொருட்களை பெற்றுக்கொள்வதற்கான வரவேற்பு இடம் ஆகியவற்றை, தேர்தல் அலுவலரும், கலெக்டருமான மெகராஜ், நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்களை 4வது மாடியில் உள்ள பாதுகாப்பு அறைகளுக்கு கொண்டு செல்வதற்கு வசதியாக, கல்லூரியில் உள்ள லிப்ட் மட்டுமின்றி தற்காலிக லிப்ட் வசதிகளை கூடுதலாக ஏற்படுத்துமாறு பொதுப்பணித்துறை அலுவலா–்களுக்கு உத்தரவிட்டார். இந்த ஆய்வின் போது, டிஆர்ஓ துர்கா மூர்த்தி,  தோதல் நடத்தும் அலுவலா–்கள் கோட்டைக்குமார், மணிராஜ், சக்திவேலு, மோகனசுந்தரம், மரகதவள்ளி, ரமேஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Related Stories:

>