×

திருச்செங்கோடு வட்டாரத்தில் கரும்பு, தென்னையில் பூச்சி தாக்குதல் கட்டுப்படுத்தும் முறை வேளாண்துறை விளக்கம்

திருச்செங்கோடு, மார்ச் 30: திருச்செங்கோடு பகுதியில் கரும்பு மற்றும் தென்னையில் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் தொழில்நுட்பம் குறித்து, வேளாண் உதவி இயக்குனர் ஜெயமணி விளக்கம் அளித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கரும்பில் வெள்ளை அசுவுணி பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்த, அடி உரத்துடன் வேப்பம் புண்ணாக்கு கலந்து இட வேண்டும். தோகையை உரித்து வயல்களை சுத்தமாக வைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட இலையை அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். பாதிப்படைந்த வயலில் இருந்து விதைக்கரணைகளை தோ்வு செய்வதை தவிர்க்க  வேண்டும். பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும்போது இயற்கையாகவே உருவாகும் எதிர் உயிரிகள் அழிந்து விட வாய்ப்புள்ளதால் அதனை தவிர்க்க வேண்டும். தென்னையில் காணப்படும் இலை கருகல் நோயை கட்டுப்படுத்த பரிந்துரைக்கப்பட்ட உரத்துடன் கூடுதலாக 5 கிலோ வேப்பம் புண்ணாக்கு மற்றும் 3.5 கிலோ பொட்டாஷ் உரத்தையும் வருடம் இருமுறை பிரித்து இட வேண்டும். பாதிப்படைந்த மரத்திற்கு 2 மிலி ஹெக்சாகோனசோல் மருந்தை 100 மிலி நீரில் கலந்து 3 மாத இடைவெளியில் வேரில் கட்ட வேண்டும். மேலும், 2 மிலி ஹெக்சாகோனசோல் மருந்தை 100 மிலி நீரில் கலந்து 3 மாத இடைவெளியில் வேரில் கட்ட வேண்டும். நீர் பாய்ச்சும் போது, பாதிக்கப்பட்ட மரத்திலிருந்து மற்ற மரங்களுக்கு நீர் செல்வதை தவிர்க்க வேண்டும். பாதிப்பினால் இறந்த மரங்களை அப்புறப்படுத்தி எரித்து விட வேண்டும். இதன் மூலம் பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Tiruchengode Area ,
× RELATED ரேஷன் கடை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்