×

கொல்லிமலை மலைப்பாதையில் டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்து

சேந்தமங்கலம், மார்ச் 30: கொல்லிமலை பிரதான மலைப்பாதையில், 40வது கொண்டை ஊசி வளைவில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக சேந்தமங்கலம், நாமக்கல் பகுதியில் இருந்து ஜல்லிக்கற்கள், எம்.சாண்ட் உள்ளிட்ட பொருட்கள் லாரிகள் மூலம் எடுத்து செல்லப்படுகிறது. நேற்று தடுப்புச்சுவர் கட்டும் பணிக்காக, எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு மலைச்சாலையில் சென்ற டிப்பர் லாரி, கொண்டை ஊசி வளைவில் திரும்பும் போது, நிலை தடுமாறி தடுப்பு சுவரில் தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் லாரி டிரைவர் லேசான காயத்துடன் தப்பினார். விபத்தால், மலைப்பாதையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த வாழவந்தி நாடு போலீசார் மற்றும் நெடுஞ்சாலை துறையினர், தடுப்பு சுவரின் மீது மோதி கவிழ்ந்த டிப்பர் லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர்.

Tags : Kollimalai hill road ,
× RELATED கொல்லிமலை மலைப்பாதையில் 51வது கொண்டை...