×

திமுக கூட்டணி வேட்பாளர் கொமதேக ஈஸ்வரனுக்கு தமிழ் மாநில கட்சி ஆதரவு

திருச்செங்கோடு, மார்ச் 30: திருச்செங்கோடு தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனுக்கு, செங்குந்த முதலியார் சமூகத்தவரால் நிறுவப்பட்ட தமிழ் மாநில கட்சி தலைவர் செல்வராஜ், மாநில துணைத்தலைவர் பேராசிரியர் பாலதண்டபாணி ஆகியோர்,  ஈஸ்வரனை நேரில் சந்தித்து முழு ஆதரவை வழங்கினர். தொடர்ந்து அவருடன் சேர்ந்து செல்வராஜ் பிரசாரத்தில் ஈடுபட்டார். கூட்டப்பள்ளி, கவுண்டம்பளையத்தில் பிரசாரத்தை துவங்கிய ஈஸ்வரன் சூரியம்பாளையம், சட்டையம்புதூர், தேவனாங்குறிச்சி, குமரேசபுரம், எட்டிமடை ஆகிய இடங்களில் வாக்கு சேகரித்தார். அப்போது, ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன்  திருச்செங்கோட்டில் ரிங் ரோடு அமைக்கப்படும். எனது கனவுத்திட்டமான  திருச்செங்கோட்டை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும்,’ என்றார். அவருடன் திமுக நகர பொறுப்பாளர்  தாண்டவன் கார்த்தி, கொமக மாவட்ட செயலாளர் நதி ராஜவேல், நகர தலைவர் நாகராஜ், செயலாளர் அசோக்குமார் மற்றும்  கூட்டணி கட்சியினர் சென்றனர். வேட்பாளர் ஈஸ்வரனுக்கு பல இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்றனர். அவர் குமரமங்கலம், வையப்பமலை, உலகப்பம்பாளையம், எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வாக்கு சேகரித்தார்.

Tags : Tamil State Party ,DMK ,Komadeka Eeswaran ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்