×

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அழைப்பு விடுத்து காவேரிப்பட்டணத்தில் கொடி அணிவகுப்பு

காவேரிப்பட்டணம், மார்ச் 30: பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அழைப்பு விடுத்து காவேரிப்பட்டணத்தில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. இதில், உள்ளூர் போலீசாருடன் இணைந்து துணை ராணுவப் படை வீரர்கள் ஊர்வலமாக சென்றனர்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 6ம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. நாடு முழுவதும் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 4100 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதே நேரத்தில் 100 சதவீத வாக்குப்பதிவுக்கு தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இதற்காக வெளி மாநிலங்களில் இருந்து இந்திய துணை ராணுவ படையினர் தமிழகத்திற்கு வரவழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அழைப்பு விடுத்து பல்வேறு இடங்களில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து கொடி அணிவகுப்பு நடத்தி வருகின்றனர்.

அதன்படி, கிருஷ்ணகிரி தொகுதிக்குட்பட்ட காவேரிப்பட்டணத்தில் நேற்று கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காவேரிப்பட்டணம் பஸ் ஸ்டாண்டில் இருந்து துவங்கிய கொடி அணிவகுப்பினை டிஎஸ்பி சரவணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த ஊர்வலத்தில், சிஆர்பிஎப் துணை கண்காணிப்பாளர்  கார்த்திகேயன் தலைமையில் உள்ளூர் போலீசாருடன் துணை ராணுவப் படை வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படையைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து  கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பு ஊர்வலம் பாலக்கோடு கூட்ரோடு மற்றும் வருவாய் அலுவலர் அலுவலகம், பனகல் தெரு வழியாக சென்று மீண்டும் பஸ் ஸ்டாண்ட் வந்தடைந்தது. நிகழ்ச்சியில்  காவல் ஆய்வாளர்கள் வெங்கடாசலம், சுரேஷ்குமார், பாஸ்கர், எஸ்.ஐ.க்கள் அறிவழகன், கண்ணன், சத்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சூளகிரி: வேப்பனஹள்ளி தொகுதிக்குட்பட்ட சூளகிரியிலும் நேற்று போலீஸ் கொடி அணிவகுப்பு நடைபெற்றது. ஓசூர்-கிருஷ்ணகிரி சாலையில் இருந்து துவங்கிய பேரணி சூளகிரி சாலை, பேரிகை சாலை, வாணியர் தெரு வழியாக நடைபெற்றது. இதில், உள்ளூர் போலீசாருடன் இணைந்து துணை ராணுவப்ப படை வீர்கள் பங்கேற்று, பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க அழைப்பு விடுத்து ஊர்வலமாக சென்றனர்.

Tags : Flag parade ,Kaveripattinam ,
× RELATED போலீசார் கொடி அணிவகுப்பு