×

களை கட்டியது ஜனநாயக திருவிழா அனைத்து கட்சியினர் இறுதிக்கட்ட பிரசாரம்

போச்சம்பள்ளி, மார்ச் 30: வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ளதால், பர்கூர் தொகுதியில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்துக் கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளதால் வேட்டி-துண்டுகள் விற்பனை அதிகரித்துள்ளது.
பர்கூர் தொகுதியில் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சி பிரமுகர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகிறார்கள். எங்கு பார்த்தாலும் கூட்டம், கூட்டமாக திரண்டு வாக்கு சேகரித்து வருவதால் பிரசார களம் களை கட்டியுள்ளது. சோம்பிக் கிடந்த ஒலி பெருக்கி உரிமையாளர்கள் பரபரப்பாகியுள்ளனர். எங்கு பார்த்தாலும் ஒலிபெருக்கி கட்டி பிரசார பாடல்களை ஒலிபரப்பியவாறு உள்ளனர். அத்துடன் ஓட்டல், மெஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. உணவு விற்பனை அதிகரித்துள்ளது. வெயில் சுட்டெரித்து வருவதால், வாட்டர் கேன்கள், பாட்டில் தண்ணீர் மற்றும் குளிர்பானம் விற்பனையும் சுறுசுறுப்படைந்துள்ளது. பெட்ரோல், டீசல் பிடிப்பதற்காக பங்க்குகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் கூறுகையில், ‘பர்கூர் தொகுதியில் பிரசார களம் பரபரப்பாகியுள்ளது. பிரசாரத்தின் போது அணியக்கூடிய கட்சி கரை கொண்ட வேட்டி- சேலை மற்றும் பனியன், துண்டுகள், சால்வைகள் உள்ளிட்டவற்றின் விற்பனையும் கூடுதலாகி உள்ளது. வாக்குப்பதிவுக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தாராளம் காட்டி வருகின்றனர். மது ஆறாக ஓடுகிறது. இதனால், பர்கூர் மற்றும் போச்சம்பள்ளி, மத்தூர் உள்ளிட்ட இடங்களில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளது . குறிப்பாக 500 ரூபாய் நோட்டு நடமாட்டம் அதிகரித்துள்ளது,’ என்றனர்.

Tags : Democratic Festival ,
× RELATED நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள்...