×

நாகொண்டப்பள்ளி பகுதி கிராமங்களில் தெலுங்கு, கன்னடத்தில் வாக்கு சேகரித்த அதிமுக ேவட்பாளர்

ஓசூர், மார்ச் 30:  ஓசூர் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜோதி பாலகிருஷ்ணாரெட்டி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். நேற்று தொகுதிக்குட்பட்ட நாகொண்டப்பள்ளியில் தனது பிரசாரத்தை துவக்கினார். தொடர்ந்து பூனப்பள்ளி, சின்னபேளகொண்டப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் வீடு வீடாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து தெலுங்கு மற்றும் கன்னடத்தில் பேசி வாக்கு சேகரித்தார். அப்போது,அதிமுக அரசு மீண்டும் பொறுப்பேற்றதும் வீடு இல்லாதவர்களுக்கு அம்மா இல்லம் திட்டத்தின் மூலமாக கான்கிரீட் வீடுகள் கட்டித் தரப்படும், கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் 2 ஜிபி டேட்டா வழங்கப்படும். 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம் அதிகரிக்கப்படும். அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ₹1500 வழங்கப்படும் என உறுதி கூறினார். அவருடன் முன்னாள் அமைச்சரும்,கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட அதிமுக செயலாளருமான பாலகிருஷ்ணரெட்டி வாக்கு சேகரித்தார். நிகழ்ச்சியில் பேரவை மாவட்ட செயலாளர் ஜெகதீஷ்,ஓட்டுநர் அணி மாவட்ட செயலாளர் சென்னகிருஷ்ணன், இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ராமு, எம்ஜிஆர் மன்ற மாவட்ட தலைவர் சந்திரன்,இணை செயலாளர் ஜேபி(எ) ஜெயப்பிரகாஷ், துணை செயலாளர் முருகன்,ஓசூர் ஒன்றியக்குழு தலைவர் சசி வெங்கடசாமி, பாகலூர் பஞ்சாயத்து தலைவர் ஜெயராம், துணைத்தலைவர் சீனிவாச ரெட்டி உள்ளிட்டடோர் வீதி வீதியாக சென்று அதிமுக தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை பொதுமக்களிடையே விநியோகித்து ஆதரவு திரட்டினர்.

Tags : AIADMK ,Telugu ,Kannada ,Nagondapalli ,
× RELATED ஒரு தொகுதி கிடைக்கும் என நம்பிக்கை...