விருதுநகரில் அதிமுக நிர்வாகி உட்பட 55 பெண்கள் மீது வழக்கு

விருதுநகர், மார்ச் 30: திமுக எம்பி ராஜாவை இழிவாக பேசிய அதிமுக மகளிரணி துணை செயலாளர் உட்பட 55 பெண்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் பழைய பஸ் நிலையம் அருகில் அதிமுக மகளிரணி துணைச்செயலாளரும், முன்னாள் நகராட்சி சேர்மனுமான சாந்தி மாரியப்பன் உட்பட 55 பெண்கள் திடீரென சட்ட விரோதமாக ஒன்று கூடி ரோட்டை மறித்து அதிமுக கொடிகளுடன் திமுக எம்பி ராஜாவை பற்றி இழிவாக பேசி கோஷம் எழுப்பினர்.இதுகுறித்து மேற்கு போலீசில் தேர்தல் கண்காணிப்பு நிலைக்குழு அலுவலர் காளிராஜ் புகார் கொடுத்தார். இதன் பேரில் ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>