சாதனைகளை சொல்லி வாக்குகள் ேகட்கிறோம் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு

ராஜபாளையம், மார்ச் 30: ராஜபாளையம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் அமைச்சர் .ராஜேந்திர பாலாஜி ராஜபாளையம் நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் வீதி, வீதியாகச் சென்று வாக்கு சேகரித்து வருகிறார். ஐஎன்டியுசி நகர், சித்ரா தியேட்டர் அருகில், தோப்புப்பட்டி தெரு, மதுரை ரோடு, கவிதா மெடிக்கல், தர்மாபுரம் தெரு, சுப்பு ராஜாமடம் தெரு, பெரியமந்தை சந்திப்பு, போஸ்பார்க், அக்ரகாரம் சந்திப்பு, சர்ச் தெரு, மாரியம்மன் கோயில் பகுதி உட்பட பல்வேறு பகுதிகளில் அவர் வாக்கு சேகரித்தார். அப்போது அமைச்சர் பேசுகையில், ‘தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் கரத்தை வலுப்படுத்தும் விதமாக அதிமுக ஆட்சிக்கு வாக்களிக்க வேண்டும். ராஜபாளையம் தொகுதிக்கு பாதாள சாக்கடை திட்டம், கொண்டாநகர் கூட்டு குடிநீர் திட்டம், முக்குடல் கூட்டுக்குடிநீர் திட்டம், சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், ரயில்வே மேம்பாலம் உட்பட பல்வேறு திட்டங்களைக் கூறி வாக்கு கேட்கிறோம். எனவே, என்னை வெற்றிப் பெறச்செய்யுங்கள் என்று கூறினார்.

Related Stories:

>