உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம் திமுகவிற்கு ஆதரவு

தேவகோட்டை, மார்ச் 30: உழைக்கும் மக்கள் உரிமை இயக்கம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழக சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக கூட்டணிக்கு வாக்களித்தால் தமிழ் தேசத்தையும், தமிழக மக்களையும் அழிப்பதற்கு சமம். யாரை தேர்வு செய்வது என்பதை விட யாரை தோற்கடிப்பது என்பதே முதன்மையாகும். பாசிச பாஜக அரசின் கைப்பாவையாக, எடுபிடியாக செயல்பட்ட அதிமுக அரசை புறக்கணிப்போம். தமிழகத்தை காக்க விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், சிறுபான்மையினர், பெண்கள் ஆகியோர்களின் இடஒதுக்கீட்டு உரிமையை காக்கவும், பெட்ரோல், டீசல், கேஸ், விலை உயர்வை தடுக்கவும் அதிமுக, பாஜக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும். மத்திய அரசு அடித்தட்டு மக்களின் கல்வியை நுழைவுத்தேர்வு என்ற பெயரில் கேள்விக்குறியாக்கி இருக்கிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை கொண்டு வர அனைவரும் திமுக தலைமையிலான மத சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஆதரவளிப்போம்’ இவ்வாறு கூறப்பட்டிருந்தது. 

Related Stories:

>