மக்களின் வசதிக்காக தேவகோட்டையில் பகுதிநேர எம்எல்ஏ அலுவலகம் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி உறுதி

தேவகோட்டை, மார்ச் 30:  காரைக்குடி சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.மாங்குடி நேற்று தேவகோட்டை வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சங்குளம், வேலாயுதபட்டிணம், வீரை, கல்லங்குடி, நாகாடி, வாகைக்குடி,  கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட ராம்நகர், காமாட்சி அம்மன் நகர், ஜீவாநகர், வள்ளியப்பா செட்யார் ஊரணி உள்பட பல்வேறு பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். தேவகோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி மக்கள் சட்டமன்ற உறுப்பினரை நேரடியாக சந்தித்து மனு அளிக்கலாம் இனி காரைக்குடி வர வேண்டாம். உங்களுக்காக தேவகோட்டையில் பகுதிநேர எம்எல்ஏ அலுவலகம் செயல்படுத்துவேன்.

கிராமப்புற மக்களின் தேவைக்கு ஏற்ப அரசு டவுன் பஸ் இயக்க நடவடிக்கை எடுப்பேன்.  தமிழகம் வளர்ச்சி பாதையில் செல்ல வேண்டும் என்றால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வேண்டும் என்றார். பிரசாரத்தில் திமுக ஒன்றிய செயலாளர் பூபாலசிங்கம், கல்லல் ஒன்றிய செயலாளர் நெடுங்செழியன், காங்கிரஸ் வட்டார தலைவர் வெங்கடாசலம், மாவட்ட ஐஎன்டியூசி புஷ்பராஜா, திமுக நிர்வாகி ஆதிகண்ணாத்தாள், காங்கிரஸ் மாவட்ட துணைத்தலைவர் அப்பச்சிசபாபதி, மதிமுக மாநில நிர்வாகி பசும்பொன் மனோகரன், கம்யூனிஸ்ட் காமராஜ், விசிக திருநாவுக்கரசு, பாண்டிச்செல்வம், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி நெல்லியான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: