திமுகவினர் மரத்தடி பிரசார கூட்டம்

திருப்புவனம், மார்ச் 30: மானாமதுரை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் தமிழரசி போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் கிராமப்புற மக்களை கவர மரத்தடி கூட்டம் நடத்த முடிவு செய்தனர். அதன்படி திருப்புவனம் அருகே அச்சங்குளத்தில் மரத்தடியில் நேற்று முன்தினம் கூட்டம் நடந்தது. இதில் ஏராளமான கிராமமக்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் கடந்த காலத்தில் திமுக செய்த மக்கள் நல திட்டங்கள், 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கொடுத்துள்ள வாக்குறுதிகளை கூறி இம்முறை தமிழரசியை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டு கொண்டனர்.

Related Stories:

>