தாயமங்கலத்தில் இன்று பொங்கல், நாளை தேரோட்டம்

இளையான்குடி, மார்ச் 30:  இளையான்குடி அருகே பிரசித்தி பெற்ற தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பெருந்திருவிழா கடந்த 23ம் தேதி காப்பு கட்டுதல், கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின் 7ம் நாளான இன்று மாலை அம்மனுக்கு பொங்கல் வைக்கும் வைபவம் நடைபெறவுள்ளது. 8ம் நாளான நாளை இரவு மின் அலங்கார தேரோட்டம் நடைபெறவுள்ளது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் 500 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories:

>